பிரதமர் மோடியை தொடர்ந்து ‘Man vs Wild’ நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்..!

பிரதமர் மோடியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கர்நாடகாவிலுள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் பியர் க்ரில்ஸுடன் இணைந்து மேன் வெர்ஸஸ் வைல்ட்(Man vs Wild) நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கர்நாடகாவிலுள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் பியர் க்ரில்ஸுடன் இணைந்து மேன் வெர்ஸஸ் வைல்ட்(Man vs Wild) நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சிகளில் ஒன்றான மேன் வெர்ஸஸ் வைல்ட் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பியர் க்ரில்ஸுடன் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக, அமெரிக்க அதிபராக பதவி வகித்தபோது ஒபாமா கலந்துகொண்டிருந்தார். அதேபோல, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்தனர்.

தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்பியதாக ரஜினிக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தற்போது மேன் வெர்ஸஸ் வைல்ட் (Man Vs Wild) நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவிலுள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் பியர் க்ரில்ஸுடன் இணைந்து இதற்கான படப்பிடிப்பில் அவர் பங்கேற்பதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்பது குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியை அடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...