வால்பாறையில் நியாய விலை கடையை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்..! அச்சத்தில் பொதுமக்கள்!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் நியாய விலை கடையின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து உள்ளே இருந்த அரிசி பருப்பு சர்க்கரையை தின்று சேதப்படுத்தி அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் நியாய விலை கடையின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து உள்ளே இருந்த அரிசி பருப்பு சர்க்கரையை தின்று சேதப்படுத்தி அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது அய்யர்பாடி ரோப்வே. வால்பாறை பொள்ளாச்சி சாலையில் உள்ள இந்த தேயிலைத் தோட்டத்தில் சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. இவர்களின் தேவைக்காக நியாய விலை கடை இயங்கி வருகிறது.



இந்நிலையில், நேற்று நள்ளிரவு இப்பகுதிக்கு வந்த 5 காட்டு யானைகள் தொழிலாளர் குடியிருப்புக்குள் உள்ள நியாய விலை கடையின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து உள்ளே இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரையை தின்று சேதப்படுத்தின.



காட்டு யானைகள் வந்திருப்பதை அறிந்த தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து பல மணி நேரம் போராடி காட்டுயானைகளை விரட்டினர். காட்டு யானைகள் அருகில் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் மீண்டும் இரவு நேரம் தங்கள் பகுதிக்கு வரும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...