கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதிஸ் மற்றும் மணிவண்ணன் ஆகியோரை வரும் பிப்ரவரி 11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதிஸ் மற்றும் மணிவண்ணன் ஆகியோரை வரும் பிப்ரவரி 11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள், பெண் டாக்டர்கள் என்று பலரை பாலியல் கொடுமைச் செய்து, அதை வீடியோ படம் எடுத்து ஒரு கும்பல் பணம் பறித்து வந்தது.
இதுகுறித்து கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்பட 5 பேரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதிஸ் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் 5 பேர் கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் செய்யப்பட்டனர். அப்போது, வரும் பிப்ரவரி 11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 11-ம் தேதி முதல் புதிய நீதிமன்றத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.