கோவை: கோவையின் நீராதாரங்களை மீட்டெடுப்பதில் சிறுதுளி தொடர்ந்து இயங்கி வரும் சிறுதுளி அமைப்பு, அதன் தொடர் செயல்பாடாக, கடந்த ஞாயிறு குடியரசு தினத்தன்று வெள்ளக்கிணறு அரசு மருத்துவமனை அருகே மாசடைந்த நிலையில் இருந்த தெற்கு சோலை குட்டையினை தூய்மை செய்யும் பணியை துவங்கியுள்ளது.

"வெள்ளக்கிணறு பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தினை பாதுகாக்கும் முக்கியமான குளம் தெற்கு சோலை குட்டை. ஆனால், இந்த குளம் குப்பை மற்றும் கழிவுகளால் நிறைந்துள்ளது. மேலும், இதற்கு வரும் நீர் வழிப் பாதையும் பராமரிக்கப்படாமலும், வந்து சேரும் கழிவு நீரும் சுத்திகரிக்கப்படாமல் இருப்பதால் குளம் மாசடைந்து உள்ளது.

ஆகவே, சிறுதுளி அமைப்பு, வெள்ளக்கினறு நீர் பசுமைப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் எஸ்.என்.எஸ் கல்லூரியின் என்.எஸ்.எஸ் மாணவர்களுடன் இணைந்து இந்தக் குளத்தினை தூய்மைப்படுத்தும் பணியினை துவக்கியுளோம். மேலும், இந்தப் பணியில் அப்பகுதியின் பொதுமக்களும் இணைந்து பங்கெடுத்துக் கொண்டனர்.
துய்மை பணியின் போது, ப்ளாஸ்டிக் மற்றும் பல்வேறு குப்பைகளை அகற்றப்பட்டது. தொடர் பணி மூலம், வருகிற கோடை காலத்துக்குள் இந்தக் குளத்தில் உள்ள குப்பை மற்றும் கழிவுகளை அகற்றி, இயற்கையான முறையில் கழிவு நீரினை சுத்தப்படுத்தி, நிர்வழிப் பாதையும் சரியாக பராமரித்து மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் குளத்தில் சுத்தமான நீர் நிரம்பும், அப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

மேலும், பல பறவை இனங்கள் பயன்பெறும், குளமும் அழகினைப் பெறும். நம் பகுதியின் நீராதாரங்களை சுத்தமாக பாதுகப்பது நம் அனைவரின் கடமை. அது நம் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்கு உறுதியளிக்கும். இந்த பணியில் சிறுதுளியின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு தூய்மைப் பணியை மேற்கொண்டனர்", இவ்வாறு சிறுதுளி அமைப்பின் செய்தி குறிப்பு தெரிவித்தது.