கோவை: கோவையில் மன அழுத்தத்தில் இருந்த 13 வயது சிறுமியை பெற்றோர்கள் சரிவர கவனிக்காததால், அவர் வயிற்றில் இருந்து சுமார் அரை கிலோ எடையுள்ள தலைமுடி, பிளாஸ்டிக் ஷாம்பூ பாக்கெட் போன்ற குப்பைகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது, எனவு விஜிம் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் கோகுல் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் மன அழுத்தத்தில் இருந்த 13 வயது சிறுமியை பெற்றோர்கள் சரிவர கவனிக்காததால், அவர் வயிற்றில் இருந்து சுமார் அரை கிலோ எடையுள்ள தலைமுடி, பிளாஸ்டிக் ஷாம்பூ பாக்கெட் போன்ற குப்பைகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது, என விஜிம் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் கோகுல் தெரிவித்துள்ளார்.
கோவையை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி தனது தாய்மாமன் இறந்த துக்கத்தில் தவித்து வந்துள்ளார். மேலும் இந்த சிறுமியை அவரின் பெற்றோரை விட தாய்மாமன் தான் நேசித்து வளர்த்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து தாய்மாமன் இறந்த துக்கத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான சிறுமி தான் என்ன செய்வதென்று அறியாமல் தலை முடி, ஷாம்பு பாக்கெட், போன்ற பொருட்களை உணவாக உண்டு வந்துள்ளார்.
மேலும், பெற்றோர்கள் சரிவர கவனிக்காததால் கடந்த ஆறு மாதமாக இந்த நிகழ்வு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படியிருக்க, கடந்த சில நாட்களாக சிறுமி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் அவரை கோவை திருச்சி சாலையில் உள்ள வி.ஜி.எம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு சிறுமியின் வயிற்றில் ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது கட்டி இருப்பது போன்று தெரிந்துள்ளது.
அதனை உடனடியாக அகற்ற வேண்டுமென மருத்துவமனையின் தலைவர் மருத்துவர். மோகன் பிரசாத் ஆலோசனையில் அறுவை சிகிச்சை நிபுணர் கோகுல் கிருபா சங்கர் மற்றும் அவருடைய மருத்துவ குழுவினர் அறுவைசிகிச்சை அரங்கத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்றனர்.
அப்போது அங்கு வைத்து அறுவை சிகிச்சை முயற்சிக்கு சென்றபோதுதான் சிறுமியின் வயிற்றில் இருப்பது கட்டி அல்ல தலை முடி, போன்ற பிளாஸ்டிக் குப்பைகள் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பல கட்ட போராட்டத்திற்கு பின் சுமார் அரை கிலோ மதிப்புள்ள குப்பை பொருட்கள் அகற்றப்பட்டது.
இதுகுறித்து வி.ஜி.எம் மருத்துவமனையின் சேர்மன் மற்றும் தலைமை மருத்துவர்.வி.ஜி.,மோகன் பிரசாத் கூறும்போது:

இந்த சிறுமிக்கு நடந்த சிகிச்சையானது சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. முதலில் எண்டோஸ்கோப் வழியாக அந்த குப்பை பொருட்களை அகற்ற முடியுமா என்று முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை.
இதைத்தொடர்ந்து, அதே மயக்கமருந்து அளவில் லேப்ராஸ்கோப்பி முறையில் வயிற்றில் இருந்த தலைமுடி போன்ற பொருட்களை அகற்றினோம். இந்த அறுவை சிகிச்சையானது எனது 32 ஆண்டு மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக நடந்துள்ளது.
இந்த சிகிச்சை ஒருவிதத்தில் வெற்றிகரமாக முடிந்தாலும், பெற்றோர்கள் குழந்தைகள் மீது அக்கறை செலுத்தாதது எவ்வளவு பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்த்துகிறது.
அதேபோல பெற்றோர்கள் சமீபகாலமாக செல்போன்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். அவர்கள் குழந்தைகளின் உடல்நிலை, அவர்களின் நடவடிக்கைகள், மற்றும் மனநிலை ஆகியவற்றை கவனிப்பதில்லை.
மேலும் குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்படும் பொழுது ஆரம்ப நிலையிலேயே பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். அப்படி செயல்படும் பொழுது இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும், என தெரிவித்தார்.