நீலகிரி: உதகையில் நண்பர்களுடன் தடையை மீறி குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் கல்லட்டி நீர்வீழ்ச்சியில், மூழ்கி மாயமான சம்பவத்தில், இரண்டாவது நாளாக படகு மூலம்தேடும் பணி தீவிரம்.

நீரில் அடித்து செல்லும் முன் குளித்த நண்பர்களை கடைசியாக அவர்கள் நண்பர்கள் படம் பிடித்துள்ளனர். மாயமான இருவருக்கும் நீச்சல் தெரியாது என தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள எல்க்ஹில் பகுதியில் வசித்து வருபவர் சாமுவேல் (24) மற்றும் கணேஷ் (24) மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர், நேற்று குடியரசு தின விழா விடுமுறை அன்று கல்லட்டி நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றுள்ளனர். குளிக்கச் சென்ற 7 இளைஞர்களுக்கும் நீச்சல் தெரியாத நிலையில் குளிக்க தடை விதித்த பகுதியில் தடையை மீறி இருவர் மட்டும் குளிக்க சென்றுள்ளனர்.
மீதம் ஐந்து பெரும் அச்சத்தால் குளிக்காமல் வெளியே பாறையில் அமர்ந்திருந்த நிலையில், சாமுவேல், கணேஷ் ஆகிய இருவர் தங்களது நண்பர்களிடம் தாங்கள் குளிக்க செல்வதாகவும் அதை செல்போனில் படம் பிடிக்க கூறிவிட்டு குளிக்க சென்றுள்ளனர். அப்போது நண்பர்கள் அந்த காட்சியை செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்தபோதே இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து தீயணைப்பு துறைக்கும் காவல்துறையினருக்கும் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று மாலை 7 மணி வரை இருவரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை மணி முதல் இரண்டாவது நாளாக படகு மூலம் தீயணைப்பு துறையினர், வனத்துறை மற்றும் காவல் துறையினர் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்லட்டி நீர்வீழ்ச்சியில் போதுமான பாதுகாப்பு பணியில் வனத்துறை ஊழியர்கள் இல்லாததால் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நீர்வீழ்ச்சியில் பல உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து எவ்வித பாதுகாப்பு பணியும் வனத்துறையினரால் அளிக்கப்படாதது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை 5 மணியுடன் தேடுதல் பணியினை நிறுத்திய தீயணைப்புத் துறையினர், நாளை அரக்காேணத்தில் இருந்து வருகை தரவுள்ள 21 பேர் காெண்ட தேசிய பேரிடர் குழுவுடன் இணைந்து தேடும் பணியில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர்.