பெட்ரோல் பங்கில் உடைமாற்றும் வீடியோ வெளியான விவகாரம்: "எங்களை குடும்பத்தை கருணைக்கொலை செய்துவிடுங்கள்", மணிகண்டனின் மனைவி ஆட்சியர் அலுவலகத்தில் மனு

கோவை: கோவையில் பெட்ரோல் பங்கில் பெண்கள் உடை மாற்றும் வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ள சம்பவத்தில் மணிகண்டனின் மனைவி பாதிக்கப்பட்டுள்ள எங்கள் குடும்பத்தை கருணை கொலை செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளார்.


கோவை: கோவையில் பெட்ரோல் பங்கில் பெண்கள் உடை மாற்றும் வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ள சம்பவத்தில் மணிகண்டனின் மனைவி பாதிக்கப்பட்டுள்ள எங்கள் குடும்பத்தை கருணை கொலை செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளார்.

கோவை கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்த தம்பதிகள் மணிகண்டன் (35) மற்றும் சவிதா(30). இவர்கள் எருக்கம்பெனி பகுதியில் உள்ள ரூட்ஸ் நிறுவனத்திற்க்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சவிதா மற்றும் சிலர் தாங்கள் பணி புரிந்து வரும் பெட்ரோல் பங்கில் உள்ள அறையில் உடைமாற்றி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரகசியமாக வீடியோ எடுப்பது போன்று தெரிந்துள்ளது. இதையடுத்து சபிதா தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து சில நாட்களில் மணிகண்டன் மீது ரூட்ஸ் நிர்வாகத் தரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பின்னர், அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரிடம் இருந்து வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதை தொடர்ந்து அவரும் அவருடன் சிலரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இப்படியிருக்க, இன்று மணிகண்டனின் மனைவி சவிதா, "நாங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்த்தவர்கள் என்பதால் புகார் கொடுக்கச் சென்ற எங்கள் மீது வழக்குப் போடுகிறார்கள். குற்றவாளிகளை தப்பிக்க விட்டு புகார்தாரராகிய என் கணவர் மீது மீது குண்டர் சட்டம் போடுகிறார்கள். ஆகவே, எங்கள் குடும்பத்தையே கருணைக்கொலை செய்ய வேண்டும்", என கோரிக்கை மனு அளித்துள்ளார்.

மேலும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளத்தாவது:-

வீடியோ விவகாரம் தொடர்பாக ரூட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் கவிதாசன், பிஆர்ஓ சரவணன், மேனேஜர் சங்கர் கணேஷ், கோபால் ஆகியோர் மீது வழக்குகள் பதியாமல் இவர்களால் தாக்குதலுக்கு உள்ளான புகார்தாரர் ஆகிய என் கணவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

இது போலியாக ஜோடிக்கப்பட்ட வழக்கு. ஆகவே, இந்த பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் இல்லையென்றால் எங்களை குடும்பத்துடன் கருணை கொலை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...