சாலை பாதுகாப்பு வார விழா: நிறைவு நாளில் பாதுகாப்பாக பேருந்துகளை இயக்கிய பேருந்து ஒட்டுநர்‌, நடத்துநர்களுக்கு ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்

கோவை: சாலை பாதுகாப்பு வார விழா நிறைவு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கிவைத்து மற்றும்‌ விபத்தின்றி பாதுகாப்பாக பேருந்துகளை இயக்கிய பேருந்து ஒட்டுநர்‌, நடத்துநர்களுக்கு பரிசுகள்‌ மற்றும்‌ பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று வழங்கினார்‌.

கோவை: சாலை பாதுகாப்பு வார விழா நிறைவு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கிவைத்து மற்றும்‌ விபத்தின்றி பாதுகாப்பாக பேருந்துகளை இயக்கிய பேருந்து ஒட்டுநர்‌, நடத்துநர்களுக்கு பரிசுகள்‌ மற்றும்‌ பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று வழங்கினார்‌.



கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌, 31வது சாலை பாதுகாப்பு வார விழா நிறைவு நாள்‌ விழா இன்று (27.01.2020) நடைபெற்றது. அதனையொட்டி கோவை வ.உ.சி மைதானத்தில்‌ வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்‌ சார்பாக 200இரண்டு சக்கரம்‌ மற்றும்‌ 300நான்கு சக்கர வாகனங்கள்‌ பங்கேற்ற மாபெறும்‌ சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ தொடங்கி வைத்தார்‌. 



அதனைத்‌ தொடர்ந்து உக்கடம்‌ பேருந்து நிலையத்தில்‌ தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்‌ சார்பில்‌ நடைபெற்ற விழாவில்‌ விபத்தில்லாமல்‌ வாகனத்தினை இயக்கிய அரசு பேருந்து ஓட்டுநர்கள்‌, நடத்துனர்கள்‌, மற்றும்‌ தொழில்நுட்ப பணியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ என 89 நபர்களுக்கு பரிசுகள்‌ மற்றும பாராட்டுச்‌ சான்றிதழ்களையும்‌ வழங்கினார்‌. 

இந்நிகழ்ச்சியில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது:

பொதுமக்களிடையே சாலை விதிகள்‌ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துகள்‌ மற்றும்‌ உயிரிழப்புகளை தவிர்க்கும்‌ நோக்கில்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ “சாலைப்‌ பாதுகாப்பு வாரம்‌” கடைபிடிக்கப்படுகிறது. 31வது சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு போக்குவரத்து துறை வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்‌ சார்பாக 20.01.2020 முதல்‌ 27.01.2020 வரை (26.01.2020 ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினம்‌ நீங்கலாக) சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்பட்டது. 

சாலைப்பாதுகாப்பில்‌ தனிக்கவனம்‌ செலுத்தி, சாலை மேம்பாட்டு பணிகளுக்கு அதிகளவில்‌ நிதியொதுக்கீடு விபத்தில்லா தமிழகத்தினை உருவாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

முதல்‌ நாள்‌ நிகழ்ச்சியாக தலைக்கவசம்‌ அணிவதன்‌ அவசியத்தினை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள்‌, ஓட்டுநர்‌ பயிற்சிபள்ளி பயிற்சியாளர்கள்‌, ஆம்னி பேருந்து ஒட்டுநர்கள்‌, தனியார்‌ பேருந்து மற்றும்‌ லாரி உரிமையாளர்கள்‌ சங்க உறுப்பினர்கள்‌, சுற்றுலா சீருந்து ஒட்டுநர்கள்‌, மகளிர்‌

சுயஉதவி குழுவினர்‌, புதிய வாகன விற்பனை முகவர்கள்‌, தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச்‌ சார்ந்தவர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ என சுமார்‌ 600 மேற்பட்டோர்‌ இருசக்கர வாகனங்களில்‌ தலைக்கவசம்‌ அணிந்து சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில்‌ கலந்து கொண்டார்கள்‌.

மேலும்‌, இரண்டாம்‌ நாள்‌ நிகழ்ச்சியாக பொதுமக்கள்‌, ஆட்டோ ஓட்டுநர்கள்‌, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள்‌ மற்றும்‌ கல்லூரி மாணவ மாணவியர்கள்‌ ஒன்றிணைந்து சாலை பாதுகாப்பின்‌ முக்கியத்துவத்தினை வலியுறுத்தி நடைபேரணி நடத்தப்பட்டது.

மூன்றாம்‌ நாள்‌ நிகழ்ச்சியாக நெடுஞ்சாலை சுங்கசாவடியில்‌ அவ்வழியே செல்லக்கூடிய அனைத்து வகை வாகன ஓட்டுநர்களுக்கும்‌ கண்பரிசோதனை மற்றும்‌ உடல்‌ பரிசோதனை மருத்துவ குழுவினர்‌ வாயிலாக சிறப்பு முகாம்‌ நடத்தப்பட்டது.

நான்காம்‌ நாள்‌ நிகழ்ச்சியாக பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவ மாணவிகளிடையே சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ பேச்சு கட்டுரை, ஒவியம்‌, சொற்றொடர்‌ வடிவமைத்தல்‌ போன்ற போட்டிகள்‌ நடத்தப்பட்டு பங்கு கொள்ளும்‌ அனைவருக்கும்‌ சான்றிதழ்‌ வழங்குதல்‌ மற்றும்‌ போட்டிகளில்‌ வெற்றி பெறும்‌ மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள்‌ வழங்கப்பட்டுள்ளது.

ஐந்தாம்‌ நாள்‌ நிகழ்ச்சியாக சாலை பாதுகாப்பில்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ குடிபோதையில்‌ வாகனம்‌ ஒட்டுதல்‌, அதிவேகம்‌, சரக்கு வாகனங்களில்‌ ஆட்களை ஏற்றி செல்லுதல்‌, சரக்கு வாகனங்களில்‌ அதிகபாரம்‌ ஏற்றி செல்லுதல்‌, சாலை சமிக்ஞை விளக்குகளை மதிக்காமல்‌ செல்லுதல்‌, செல்போன்‌ பேசிக்கொண்டே வாகனம்‌ ஒட்டுதல்‌ ஆகிய குற்றங்களினால்‌ ஏற்படும்‌ விபத்துகளை தடுக்கும்‌ பொருட்டு உச்சந்திமன்ற வழிகாட்டுதலின்படி, கல்லூரி மாணவ மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆறாம்‌ நாள்‌ நிகழ்ச்சியாக சாலை பாதுகாப்பில்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ பொருட்டு கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ அனைத்து சுங்கசாவடிகளிலும்‌ வாகன தணிக்கை மேற்கொண்டு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்‌ வழங்கியும்‌, இரவு முழுவதும்‌ தொடர்ந்து வாகனத்தினை இயக்கும்‌ ஒட்டுநர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தி விபத்துகளை தடுக்கும்‌ வகையில்‌ அவர்களுக்கு தேனீர்‌ வழங்கியும்‌, உரிய அறிவுரைகள்‌ வழங்கியும்‌, வாகனங்களில்‌ சிகப்பு, மஞ்சள்‌, வெள்ளை நிறங்களில்‌ பிரதிபலிக்கும்‌ பட்டைகள்‌ ஒட்டியும்‌, ஒட்டுநர்களுக்காக மருத்துவ குழுவினரால்‌ பல்‌ சம்பந்தப்பட்ட இலவச மருத்துவ முகாம்‌ நடத்தப்பட உள்ளது. மேலும்‌, காந்திபுரம்‌, உக்கடம்‌, சிங்காநல்லூர்‌, மேட்டுப்பாளையம்‌ சாலை பேருந்து நிலையங்களில்‌ கலைக்குழுவினர்‌ வாயிலாக கலை நிகழ்ச்சிகள்‌ நடத்தப்பட்டு

விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நிறைவு நாள்‌ நிகழ்ச்சியாக சாலைப்‌ பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ பொருட்டு கோயம்புத்தூர்‌ மாவட்டத்திலுள்ள அனைத்து ஓட்டுநர்‌ பயிற்சிப்‌ பள்ளிகள்‌, புதிய வாகன விற்பனை முகவர்கள்‌ மற்றும்‌ ஓட்டுநர்கள்‌ ஆகியோருடன்‌ வாகன பேரணி நடத்தப்பட்டுள்ளது. 

மேலும்‌ விபத்து முதலுதவி குறித்து 108 அவசர விபத்து சிகிச்சை மருத்துவ குழுவினரால்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து, விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுத்த மாநிலங்களில்‌, முதன்மையான மாநிலமாக, தமிழகம்‌ தேர்வு செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துகளின்‌ போது, விலை மதிப்பில்லாத மனித உயிர்களை காப்பாற்றுவதற்காக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்‌ நடத்தப்பட்டு வருகிறது.

மக்கள்‌ சாலைகளில்‌ செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும்‌. மோட்டார்‌ சைக்கிள்‌ மற்றும்‌ வாகனங்களில்‌ செல்லும்போது போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்‌. தலைக்கவசம்‌ அணிந்து மற்றும்‌ போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன்‌ மூலம்‌ விபத்துகள்‌ குறைந்துள்ளது. என

மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்தார்‌.

தொடர்ந்து சாலைபாதுகாப்பு தொடர்பாக வீதி நாடகம்‌ நடைபெற்றது. இவ்விழிப்புணர்வு நாடகத்தில்‌ பங்கேற்ற அனைவருக்கும்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌, சட்டமன்ற உறுப்பினகள்‌, பாராட்டி பரிசுகளை வழங்கினார்‌.

இந்நிகழ்வின் போது, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ அம்மன்‌.கே.அர்ச்சுணன்‌, எட்டிமடை.எ.சண்முகம்‌, வி.பி.கந்தசாமி, மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ சுஜித்குமார்‌,இ.கா.ப, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை இணை ஆணையர்‌, உமாசக்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்‌ இயக்குநர்‌ அ.அன்பு ஆபிராகாம்‌, வட்டார போக்குவரத்து அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...