கோவை: கோவை மாவட்டத்திற்குட்பட்ட அரசூர் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக, திமுக முன்னாள் கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை அரசூர் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் மற்றும் பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டனர்.
இப்படியிருக்க இக்கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த திமுக உறுப்பினர்களும் கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். இதில் திமுக முன்னாள் கவுன்சிலர் முத்துலிங்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என வலியுறுத்தினார்.
மேலும், அவர் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அரசூர் ஊராட்சி செயலாளர் சிவசாமி சூலூர் காவல் நிலையத்தில் அமைச்சர் குறித்து அவதூறு பேசியதாக புகார் அளித்தார்.
இதையடுத்து, கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட சூலூர் போலீசார் முத்துலிங்கத்தின் மீது தகாத வார்த்தையில் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதை தொடர்ந்து அவரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.