கோவையில் தொழிலதிபர் வீட்டில் 100 பவுன் தங்க நகை மற்றும் 10 லட்ச ரூபாய் கொள்ளை: சிங்காநல்லூர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை

கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட மசக்காளிபாளையம் பகுதியில் வசித்து வரும் தொழிலதிபர் வீட்டில் 100 பவுன் தங்க நகை மற்றும் 10 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட மசக்காளிபாளையம் பகுதியில் வசித்து வரும் தொழிலதிபர் வீட்டில் 100 பவுன் தங்க நகை மற்றும் 10 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை மசக்காளிபாளையம் பெரியார் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஆதம்ஷா. இவர் பட்டணம் பகுதியில் இன்ஜினியரிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 24 ஆம் தேதி தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு குடும்பத்துடன் சென்று உள்ளார்.

பின்னர், நேற்று இரவு மீண்டும் வீட்டிற்க்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, படுக்கை அறையில் இருந்த மூன்று பீரோக்களில் இருந்து 10 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 100 பவுன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

உடனே, அவர் சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 



மேலும், கொள்ளை நடந்த வீட்டில் சிசிடிவி ஏதும் இல்லாததால், அந்த தெருவில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...