ஹைட்ரோ கார்பன் திட்டம்: கருப்பு தலப்பாக்கட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் மனு

கோவை: ஹைட்ரோ கார்பன் திட்டம்: நிறைவேற்றுவது குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்க வேண்டும்; தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் கோரிக்கை மனு அளித்தனர்.

கோவை: ஹைட்ரோ கார்பன் திட்டம்: நிறைவேற்றுவது குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்க வேண்டும்; தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் கோரிக்கை மனு அளித்தனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றுவது குறித்து விவசாயிகளிடம் கருத்துக் கேட்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தலையில் கருப்பு துணியால் தலப்பாக்கட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற சுற்று சூழல் அமைச்சகத்தின் அனுமதி தேவையில்லை என்று அறிவித்துள்ளது. மேலும் மாநில அரசிடமும் பொதுமக்களிடம் கருத்து கேட்காமலேயே அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் எனவும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் எனவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் பழனிசாமி மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகனிடம் தலையில் கருப்புத் துணியால் தலப்பாக்கட்டி நூதன முறையில் கோரிக்கை மனு அளித்தார்.

மேலும் இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:-

மாநில அரசிடமும், மக்களிடமும் கருத்துகள் கேட்காமலே அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களின் கருத்துகளை கேட்காமல் தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என மத்திய சுற்று சுழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...