கோவை மாநகராட்சியில்‌ 71வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்; மாநகராட்சி ஆணையர் தேசிய கொடியேற்றி மரியாதை!

கோவை: கோவை மாநகராட்சியில்‌ நடைபெற்ற 71வது குடியரசு தின விழாவில்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தேசியக்கொடியை ஏற்றி வைத்து, சிறப்பாக பணியாற்றிய 117 பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்‌ வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ நடைபெற்ற 71வது குடியரசு தின விழாவில்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தேசியக்கொடியை ஏற்றி வைத்து, சிறப்பாக பணியாற்றிய 117 பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்‌ வழங்கினார்.



கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ இன்று 71-வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ மகாத்மா காந்தியடிகளின்‌ திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்‌, விக்டோரியா அரங்க வளாகத்தில்‌ தேசியக்‌ கொடியினை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர் ஏற்றி வைத்தார்.

இவ்விழாவில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌ முன்னிலை வகித்தார். ஆர்‌.எஸ்‌.புரம்‌, வடகோவை, இராமநாதபுரம்‌ மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளைச்‌ சேர்ந்த சாரணார்படை மாணவர்களின்‌ அணிவகுப்பு மரியாதையினை மாநகராட்சி ஆணையாளர்‌ ஏற்றுக்கொண்டார்.

பின்னர்‌, கோவை மாநகராட்சியில்‌ 25 ஆண்டுகள்‌ அப்பழுக்கின்றி பணியாற்றிய அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ 12 பேருக்கு வெகுமதியாக தலா ரூ.2,000 மற்றும்‌ பாராட்டு சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையாளர்‌ தனிஅலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ வழங்கினார்.

பின்னர்‌, கோயம்புத்தூர்‌ ஆர்‌.எஸ்‌.புரம்‌ (மேற்கு) மாநகராட்சி பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளி மற்றும்‌ ராமலிங்கம்‌ காலனி மாநகராட்சி துவக்கப்பள்ளி, ஓக்கிலியா்‌ காலனி மாநகராட்சி துவக்கப்பள்ளி, மசக்காளிபாளையம்‌ மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ஆர்‌.எஸ்‌.புரம்‌ எஸ்‌.ஆர்‌.பி அம்மணியம்மாள்‌ மாநகராட்சி பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின்‌ சார்பில்‌ மாணவ, மாணவியர்களின்‌ கலை நிகழ்ச்சிகள்‌ சிறப்பாக நடைபெற்றது.



இவ்விழாவில்‌ மாநகராட்சிப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, உதவி ஆணையார்கள்‌ தி.ரா.ரவி, செந்தில்குமார்ரத்தினம்‌, மகேஷ்‌ கனகராஜ், ம.செல்வன்‌, ஏ.ஜே.செந்தில்‌அரசன்‌, உதவி ஆணையர்‌ (பணியமைப்பு) ம.சுந்தாராஜன்‌, உதவி ஆணையர்‌ (வருவாய்‌) அண்ணாதுரை, செயற்பொறியாளர்‌ திட்டம்‌ எஸ்‌.ரவிச்சந்திரன்‌, உதவி ஆணையாளர்‌ (ஸ்மார்ட்‌சிட்டி திட்டம்‌ கணக்குகள்‌) ஆர்‌.மோகனசுந்தரி, செயற்பொறியாளா்கள்‌ கருப்பசாமி, சரவணக்குமார்‌, மாநகர நகர்நல அலுவலா்‌ கே.சந்தோஸ்குமார்‌, மாநகர கல்வி அலுவலர்‌ ஆ.வள்ளியம்மாள்‌, மக்கள்‌ தொடா்பு அலுவலா்‌ ரெ.மதியழகன்‌, இளம்‌ பொறியாளர்‌ குமரேசன்‌, நிர்வாக அலுவலர்‌ நார்முகமது, மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...