கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் கிராம சபைக் கூட்டம்; பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற கொண்ட மாவட்ட ஆட்சியர்!

கோவை: கோவை மாவட்டம்‌ கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம்‌, சிறுகளந்தை ஊராட்சியில்‌ நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

கோவை: கோவை மாவட்டம்‌ கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம்‌, சிறுகளந்தை ஊராட்சியில்‌ நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். 

கோவை மாவட்டம்‌, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம்‌, சிறுகளந்தை ஊராட்சி, ஐக்கார்பாளையம்‌ கிராமத்தில்‌ இன்று (26.01.2020) குடியரசு தின விழாவையொட்டி கிராம சபைக்‌ கூட்டம்‌ ஊராட்சி தலைவர்‌ பி. குணசேகரன்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது. 

இக்கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள்‌ பெற்றுக் கொண்டார்‌. இக்கூட்டத்தில்‌ சார்‌ ஆட்சியர்‌ பொள்ளாச்சி வைத்தியநாதன்‌ இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்‌ ரமேஷ்குமார்‌, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்‌(மகளிர்‌ திட்டம்‌) இயக்குநர்‌ கு.செல்வராசு, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய தலைவர்‌ சே.நாகராணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்‌ இராதாமணி, உதவி இயக்குநர்‌ (ஊராட்சிகள்‌) என்‌.உமாதேவி, இணை இயக்குநர்‌(வேளாண்மை) சித்ராதேவி, தோட்டக்கலை துறை இயக்குநர்‌ உமாராணி, வட்டாட்சியர்‌(மதுக்கரை) பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்‌ ஜெயகுமார்‌,

சாய்ராஜ்சுப்பிரமணி மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ கலந்துகொண்டனர்‌.

முன்னதாக, ஸ்பர்ஷ்‌ தொழுநோய்‌ விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ கிராமசபைக்‌ கூட்டத்தில்‌ கலந்து கொண்ட அனைவரும்‌ எடுத்துக்கொண்டனர்‌. அதனைத்தொடர்ந்து, மானவாரி மேம்பாட்டுத்‌திட்டத்தின்‌ மூலம்‌ 5 பயனாளிகளுக்கு மா, நெல்லி, மாதுளை, போன்ற பழக்கன்றுகளும்‌, ஒரு பயனாளிக்கு 20 கிலோ கிராம்‌ தட்டைப்பயிர்‌ விதை ரூ.1000/- மானியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ வழங்கினார்‌.

பின்னர்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தெரிவிக்கையில் ;-

கிராமசபைக்‌ கூட்டங்கள்‌ கிராமங்கள்‌ தோறும்‌ நடத்தப்படுவதன்‌ நோக்கம்‌, பொதுமக்கள்‌ அவர்கள்‌ சார்ந்த ஊராட்சியில்‌ நடைபெறும்‌ வளர்ச்சி பணிகளை தெரிந்து கொள்ள வேண்டும்‌ என்பதாகும்‌. அதனடிப்படையில்‌, கிராமசபைக்‌ கூட்டங்கள் நடத்தப்படுவதன்‌ மூலம்‌, பொதுமக்கள்‌ முழு அளவில்‌ கலந்து கொண்டு ஊராட்சிப்பகுதிகளில்‌ அரசின்‌ சார்பில்‌ செயல்படுத்தப்படும்‌ திட்டப்பணிகளை பொதுமக்கள்‌ தெரிந்து கொள்வதுடன்‌, தங்கள்‌ பகுதிகளில்‌ வளர்ச்சிக்குத்‌ தேவையான திட்டங்களை தீர்மானம்‌ மூலம்‌ நிறைவேற்றிட வழிவகுக்கின்றது. 

எனவே, தங்கள் பகுதியில்‌ கிராமசபைக்‌ கூட்டம்‌ நடைபெறும்‌ போது பொதுமக்கள் தவறாமல்‌ கலந்து கொண்டு ஊராட்சியின்‌ வளர்ச்சிக்கு அடிப்படை வசதிகளை பெறுவதில் உறுதுணையாக இருந்திட வேண்டும்‌. இந்த ஊராட்சியில்‌ அனைத்து விதமான அடிப்படை மேம்பாட்டு பணிகளும்‌ மேற்கொள்ளப்பட்டு தன்னிறைவு பெற்ற கிராமமாக திகழ்கின்றது.

விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடிய பாரத பிரதமரின்‌ கிசான் சம்மான்‌ நிதியுதவி வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ சிறு குறு விவசாயிகளின்‌

வாழ்வாதாரத்துக்காக ஆண்டுக்கு ரூ.6000/- நிதி உதவி வழங்கப்படுகிறது. இவ்‌உதவித்‌ தொகை நான்கு மாதங்களுக்கு ஒரு முறையென மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. மகளிர்‌ திட்டத்தின்‌ மூலம்‌ அம்மா இருசக்கர வாகனம்‌ 50 சதவிகித மானியம்‌ அல்லது ரூ.25,000/- இவற்றில்‌ எது குறைவோ அத்தொகை இத்திட்டத்தின் கீழ்‌ மானியமாக உழைக்கும்‌ மகளிர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டங்களில்‌ கீழ்‌ பயன்பெற தகுதியுடைய நபர்கள்‌ சம்மந்தப்பட்ட துறைகளை அணுகி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்தார்‌.

மேலும்‌, கிராம ஊராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ பொது நிதி செலவினம்‌ குறித்தும், ஊரகப்‌ பகுதிகளில்‌ மழைநீர்‌ சேகரிப்பு அமைப்புகள்‌ ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும்‌ நீர்‌ மேலாண்மை இயக்கம் குடிமராமத்து என்ற மக்கள்‌ இயக்கம்‌, குடிநீர்‌ சிக்கனமாக பயன்படுத்துதல்‌, கொசுக்கள் மூலம்‌ பரவும்‌ டெங்கு காய்ச்சல்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்தும்‌, ஊராட்சி பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ பல்வேறு திட்டப்‌ பணிகள்‌ முன்னேற்றம்‌ மற்றும்‌ நிதி செலவின விபரங்கள்‌ குறித்தும்‌, மக்கள்‌ திட்டமிடல்‌ இயக்கம்‌, பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ உற்பத்தி தடைசெய்தல்‌, உணவுபொருள்‌ வழங்குதல்‌, முதலமைச்சரின்‌ சூரிய மின்‌ சக்தியுடன்‌ கூடிய பசுமை வீடு திட்டம்‌ (2020-21), பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்‌(ஊரகம்‌), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்‌, ஐல்சக்தி அபியான்‌, பிரதம மந்திரி கிராம சாலைகள்‌ திட்டம்‌ உள்ளிட்ட இதர பொருட்கள்‌ குறித்து

விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள்‌ நிறைவேற்றப்பட்டது. 

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள்‌ பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, விரைவாக நடவடிக்கை எடுக்கவும்‌, அனைத்து பகுதிகளிலும்‌ குடிநீர் சீரான முறையில்‌ பொதுமக்களின்‌ பயன்பாட்டிற்கு விநியோகம்‌ செய்தல், தெருவிளக்குகள்‌ சீரமைக்கும்‌ பணி மற்றும்‌ சாலைகள்‌ அமைக்கும்‌ பணி போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...