கோவை: 71வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை புலியகுளம் டி-1 காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவலர் சிறுவர் சிறுமியர் மன்றத்தில் கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தேசியக்கொடியை ஏற்றி முப்பெரும் விழாவை துவங்கி வைத்தார்.
கோவை: 71வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை புலியகுளம் டி-1 காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவலர் சிறுவர் சிறுமியர் மன்றத்தில் கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தேசியக்கொடியை ஏற்றி முப்பெரும் விழாவை துவங்கி வைத்தார்.

கோவை புலியகுளம் டி-1 காவல் நிலைய எல்லைக்குள் காவலர் சிறுவர் சிறுமியர் மன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த மன்றத்தில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா மற்றும் சுதந்திர தின விழாக்களுக்கு கொடியேற்றி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப் படுத்துவது வழக்கம்.

அதேபோல இன்று 71வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன், உதவி ஆணையாளர் செட்ரிக் மனுவேல், ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் சிலம்பாலயா குழுவைச் சேர்ந்த பல்வேறு வெற்றியாளர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. அதேபோல டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சைனி ரிச் என்ற சிறுமிக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. அப்போது, சிலம்ப வீராங்கனையான சைனி மேடை முன்பு சிலம்பத்தை சுழட்டி தனது திறமையை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் கூறும்போது ;-
வருங்கால மாணவ, மாணவிகள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு விளையாட்டு போட்டிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் கோபங்கள் மனிதனை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது. சாரி, தேங்க்ஸ்(Sorry, Thanks) என்ற இரண்டு வார்த்தைகள் புழங்கும் இடங்களில் பிரச்சனைகள் உருவாகுவதில்லை. ஆகவே பொறுமை காத்து மனதையும் உடலையும் உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்த ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர் ஜெசிகுமார், உளவுப்பிரிவு ஆனந்த், காவலர்கள் சத்தியமூர்த்தி, ரமேஷ், ஸ்டெல்லா சிறுவர் சிறுமியர் மன்ற பொறுப்பாளர்கள் சீனிவாசன், ஆல்பர்ட் உள்ளிட்ட பலருக்கு சிலம்பாலயா ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் நன்றி தெரிவித்தார்.