வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் புலி தாக்கி சிறுத்தை பலி..! பொதுமக்கள் அச்சம்

கோவை: வால்பாறையை அடுத்த வெள்ளமலை மட்டம் தேயிலை தோட்டத்தில் புலி, சிறுத்தையை தாக்கி கொன்று சாப்பிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை: வால்பாறையை அடுத்த வெள்ளமலை மட்டம் தேயிலை தோட்டத்தில் புலி, சிறுத்தையை தாக்கி கொன்று சாப்பிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் புலி, சிறுத்தை, காட்டு யானைகள் உட்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில், வால்பாறையை அடுத்த வெள்ளமலை மட்டம் தேயிலை தோட்டத்தில் துர்நாற்றம் வீசுவதை அறிந்த தோட்ட காவலர்கள் அந்த பகுதியை பார்வையிட்டனர். அப்போது ஒரு சிறுத்தை இறந்து கிடந்தது தெரிய வந்தது. 



இதையடுத்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரகர் சம்பவ இடத்தை பார்வையிட்டு சிறுத்தையின் உடலை கைப்பற்றி வன உயிரின மேலாண்மை மையத்திற்கு கொண்டு வந்தனர். ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் மாரிமுத்து இறந்த சிறுத்தையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அங்கு சிறுத்தை உடல் கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 



அப்போது, இறந்த சிறுத்தைக்கு வயது 2 என்றும் ஆண் சிறுத்தையை புலி தாக்கி கொன்று சாப்பிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். சிறுத்தையின் உடல் பாகங்கள் ஆய்வுக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ள உடல் பாகங்கள் எரியூட்டப்பட்டன. தேயிலை தோட்டத்தில் புலி, சிறுத்தையை தாக்கி கொன்று சாப்பிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...