பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் சுனாமியின் போது ஏற்பட்ட இழப்பை விட அதிகம் - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

கோவை: மோடி ஆட்சி செய்த முதல் 5 ஆண்டுகளில் பொருளாதாரம் வளர்ச்சி ஏற்படவில்லை எனவும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் சுனாமியின் போது ஏற்பட்ட இழப்பை விட அதிகம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்தார்.

கோவை: மோடி ஆட்சி செய்த முதல் 5 ஆண்டுகளில் பொருளாதாரம் வளர்ச்சி ஏற்படவில்லை எனவும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் சுனாமியின் போது ஏற்பட்ட இழப்பை விட அதிகம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்தார். 

கோவை வி.கே.கே மேனன் சாலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், மோடி ஆட்சி செய்த முதல் 5 ஆண்டுகளில் தொழில், விவசாயம், பொருளாதாரம், அண்டை நாடுகளுடன் உறவு போன்ற எதுவுமே வளர்ச்சி ஏற்படவில்லை எனவும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் சுனாமியின் போது ஏற்பட்ட இழப்பை விட அதிகம் என தெரிவித்தார். மேலும் ஜி.எஸ்.டி வரியில் பிழைகள் இல்லை எனவும் அதை விதித்தவர்களிடம்தான் பிழைகள் இருக்கின்றது என விமர்சித்தார்.



கோவை உட்பட நாடு முழுவதும் சிறு, குறு தொழில்கள் மூட காரணம் ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் என கூறிய அவர், மத்திய ஆட்சியின் அவலங்களை எதிர்க்க வேண்டியது எதிர்கட்சியின் கடமை எனவும், அந்த கடமையை சரியாக செய்யாததன் காரணமாக மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டதாக கூறினார். 2018 -19 ஆண்டில் இருந்தே பொருளாதாரம் சரிய துவங்கி விட்டது என கூறிய அவர், சரிந்து கொண்டு இருக்கிற பொருளாதார சூழலில் மோடி மீண்டும் வெற்றி பெற்றதால் அவர்கள் இறுமார்ப்பு அடைந்து உள்ளனர் எனவும் அதனால் ஆட்சிக்கு வந்தவுடன் முத்தலாக், தேசிய குடியுரிமை பதிவேடு, காஷ்மீர் விவகாரம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றை அடுத்தடுத்து செய்து வருகின்றனர் என தெரிவித்தார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடும் இளைஞர்களுக்கு தலை வணங்குகின்றேன் என கூறிய அவர், டெல்லி, கல்கத்தா உட்பட பல்வேறு வடமாநிலங்களில் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது எனவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டம் குறித்து கேட்ட கேள்விக்கு பதில்களை இந்த அரசு சொல்லவில்லை என கூறிய ப.சிதம்பரம், சட்ட நிபுணர்கள், அறிஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இந்த சட்டம் செல்லாது என சொல்கின்றனர் என தெரிவித்தார். எதிர்ப்பு தெரிவிக்கும் யாரையும் அழைத்து பேசாமல், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் இருந்து பின்வாங்க மாட்டோம் என அமித்ஷா சொல்கின்றார் என தெரிவித்தார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடும் ஏதாவது 5 தலைவர்களை தேர்வு செய்து அவர்களுடன் பிரதமர் மோடி விவாதிக்க தயாரா? என கேள்வி எழுப்பிய அவர், அந்த 5 பேரின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் சொல்லட்டும் என தெரிவித்தார். இந்தியாவில் பத்திரிகை, தொலைக்காட்சிகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை எனவும், அப்படி செயல்பட்டால் வழக்குகள் போடுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு தற்போது ஏற்பட்டு இருக்கின்றது என கூறிய அவர், இந்தியாவில் 3 கோடி பேர் வேலை இழந்து இருக்கின்றனர் எனவும் மென்பொருள் துறையில் மட்டும் 15 லட்சம் பேர் வேலை இழந்து இருக்கின்றனர் என்றும் நாட்டில் வெறும் 4.8 சதவீத வளர்ச்சி மட்டும்தான் ஏற்பட்டு இருக்கின்றது எனவும் தெரிவித்தார். கோவையில் மட்டும் 5000 வீடுகள் கட்டப்பட்டு விற்கப்படாமல் இருக்கின்றது என கூறிய அவர், வாரத்தில் 7 நாட்களும் வேலைக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் தற்போது வேலையில்லாமல் இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார். மேலும் நெசவு தொழில் நசிந்து கிடக்கின்றது எனவும் தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை இந்திய மாணவர்களும்,

இளைஞர்களும், பெண்களும் நிரப்பி வருகின்றனர் என கூறிய அவர், அரசியல் கட்சிகள் ரோசத்துடன் போராட வேண்டும் எனவும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத், காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி, மயூரா ஜெயகுமார், மோகன் குமாரமங்கலம், மனோகரன், வீனஸ் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...