நடிகர் ரஜினிகாந்த் கழுவுற மீனில் நழுவுற மீன்..! பாஜக வலையில் சிக்கமாட்டார் - கே.எஸ். அழகிரி

கோவை: நடிகர் ரஜினிகாந்த் கழுவுற மீனில் நழுவுற மீன் எனவும் பாஜக வலையில் அவர் சிக்கமாட்டார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

கோவை: நடிகர் ரஜினிகாந்த் கழுவுற மீனில் நழுவுற மீன் எனவும் பாஜக வலையில் அவர் சிக்கமாட்டார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தேசிய கொடியினை ஏற்றிவைத்து கட்சியினருக்கு இனிப்புகளை வழங்கினார். 



இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ். அழகிரி, பல நாடுகளை ஒருங்கிணைத்து இந்தியா என்ற நாட்டை காங்கிரஸ் கட்சி உருவாக்கியது எனவும் நாட்டை பல தேசங்களாக உடைக்க பாஜக முயற்சிக்கிறது என தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை செயல்படுத்தும் பாஜகவினால் இந்தியாவின் சுதந்திரத்திற்கும், குடியரசிற்கும் பாதிப்பு வந்துள்ளது என்றார். 

பெரியார் ஒரு சமூக சீர்திருத்தவாதி எனவும் நடிகர் ரஜினிகாந்த் பாஜக சார்பாக இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது என கூறிய அவர், பெரியாரை விமர்சித்த நடிகர் ரஜினிகாந்த் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது துக்ளக் பத்திரிக்கையில் கருப்பு அட்டை படத்தை வெளியிட்டு சோ பாஜகவை விமர்சித்ததை ஏன் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினார். 

நடிகர் ரஜினிகாந்த் கழுவுற மீனில் நழுவுற மீன் எனவும் ரஜினிகாந்த் பாஜக வலையில் சிக்க மாட்டார் என்று கூறிய அவர், ஆர்.எஸ்.எஸ். கொள்கையான 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டிக்கிறது எனவும் இது சமூக நீதிக்கு எதிரான கல்வி முறை என்று கூறினார். 

மேலும், திறமை என்ற பெயரில் மனுதர்மத்தை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது எனவும் 5 மற்றும் 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது குலக்கல்வி திட்டம் எனவும் கூறிய அவர், பெரியார் பாதையை பின்பற்றி வந்த அதிமுக சார்பில் இப்பொதுத்தேர்வை ஏற்றுக்கொண்டது தவறு என தெரிவித்தார்.

ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்பது சாத்தியமே இல்லை எனவும் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் முடிவெடுக்கப்படும் எனவும் தமிழ்நாட்டில் ஒரு அரசாங்கமே நடைபெறவில்லை எனவும் நீட் பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நிறுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என அவர் கூறினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடு அடைந்துள்ளதாகவும் மணல் வியாபாரம் மற்றும் சிமெண்ட் விற்பனையில் வெளிப்படையாக ஊழல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...