கோவை: கோவை மாநகர சி-2 பந்தய சாலை காவல் நிலையம் மாநில அளவில் சிறந்த காவல் நிலையத்திற்கான தகுதியில் முதலிடம் பெற்றதற்கு தமிழக முதல்வர் கோப்பை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
கோவை: கோவை மாநகர சி-2 பந்தய சாலை காவல் நிலையம் மாநில அளவில் சிறந்த காவல் நிலையத்திற்கான தகுதியில் முதலிடம் பெற்றதற்கு தமிழக முதல்வர் கோப்பை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் நாட்டில் சிறந்த பத்து காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதானது கடந்த 2017ம் ஆண்டு கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட ஆர் எஸ் புரம் காவல்நிலையத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டிற்கான விருதுகள் பெற கோவை மாநகரில் உள்ள சி-2 பந்தய சாலை காவல் நிலையமும், போத்தனூர் டி-3 காவல் நிலையமும் தயாராகியது.
இதில் குறிப்பாக சி-2 காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொது மக்களை வரவேற்கும் வகையில் வரவேற்பறையில் இருந்து, சுத்திகரித்த குடிநீர், குழந்தைகள் விளையாடும் வகையில் காப்பகம், தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை,காவலர்களுக்கு ஓய்வரை, பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனி தனி லாக்கப், குற்ற பதிவேடுகளை காக்கும் அரை என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது 2020ம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக கோவை பந்தய சாலை காவல் நிலையம் மாநில அரசால் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து குடியரசு தின விழாவான இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறந்த காவல் நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ள கோவை சி-2 பந்தய சாலை காவல் நிலையத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்தார். இதையடுத்து சி-2 காவல் நிலைய ஆய்வாளர் சக்திவேல் முதல்வரிடம் கோப்பையை பெற்றுக் கொண்டார்.