கோவை: கோவை வஉசி மைதானத்தில் 71வது குடியரசு தின விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கு ராசாமணி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
கோவை: கோவை வஉசி மைதானத்தில் 71வது குடியரசு தின விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கு ராசாமணி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

71 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை வ.ஊ.சி. மைதானத்தில் குடியரசு தின விழாவிற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அவர்கள் கோவை வஉசி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடி மேடைக்கு வருகை தந்து தேசிய கொடியை சரியாக 8 மணிக்கு ஏற்றி வைத்து காவலர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
ஆயுதபடை தலைமை காவல் ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பில் காவல்துறை, தீயணைப்புத்துறை, என்.சி.சி, நாட்டு நல பணி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகளிர் திட்டம் மூலம் 8 பேருக்கு 29 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும் சுய உதவி குழுவில் கடன் திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 55 நபர்களுக்கு 20 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயும் தொழிலாளர் நல சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் பணியிடத்தை மரணம் மற்றும் இயற்கை மரணம் என பதினோரு பேருக்கு 75 ஆயிரம் ரூபாயும் மாவட்ட தொழில் மையம் சார்பில் நூற்பாலை துவங்கவும் உதிரிபாகம் தயாரிப்பு துவங்கவும் இரண்டு பேருக்கு இரண்டு கோடியே 40 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் தோட்டக்கலைத்துறை மூலம் 5 பேருக்கு 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும் வேளாண்மைத்துறை மூலம் 5 நபர்களுக்கு 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 20 பேருக்கு 6 லட்சத்து 88 ஆயிரம் தாட்கோ மூலம் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகன கொள்முதல் வகைக்கு 3 நபர்களுக்கு 14 லட்சத்து 33 ஆயிரத்து 750 ரூபாய் என மொத்தம் 158 பயனாளிகளுக்கு 3 கோடியே 32 லட்சத்து 13 ஆயிரத்து 345 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை தீயணைப்பு துறை மருத்துவம் கல்வி பொதுசேவை என பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட நபர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.மேலும் குடியரசு தின விழாவையொட்டி கோவை மாவட்டத்தில் வசிக்கும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் கௌரவிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மருத்துவ கல்லூரி முதல்வர் அசோகன், டி.ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட காவல் ஆணையர் சுமித் சரண்,காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், குற்ற பிரிவு துனை ஆணையர் உமா,சட்டம் ஒழுங்கு துனை ஆணையர் பாலாஜி சரவணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.