கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் கல்லார் தூரிப்பாலம் அருகே காரும் சரக்கு லாரியும் மோதிய விபத்தில் லாரி தீ பற்றியது. இதில் லாரியில் பயணித்த லாரி கிளீனர் தீயில் கருகி உயிரிழந்தார்.

நீலகிரி மவட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த சரக்கு லாரியும் திருப்பூரில் இருந்து உதகைக்கு நோக்கி சென்ற காரும் கல்லாரில் நேருக்கு நேர் மோதிவிபத்து ஏற்பட்டது. இதில் காரின் மீது மோதிய லாரி நிலை தடுமாறி மீண்டும் அருகில் இருந்த மரத்தின் மீதும் மோதியது, இதில் லாரி திடீரென தீ பிடித்து மள மளவென பற்றி எரியத்துவங்கியது.
விபத்தில் லாரி ஓட்டுநர் குதித்து தப்பிய நிலையில் உடன் வந்த கிளீனர் கால் லாரியில் மாட்டிகொண்டது, அவர் வெளியேறாத முடியாததால் லாரியில் ஏற்பட்ட தீயில் உடல் முழுவதும் கருகி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், இந்த விபத்தில் காரில் பயணித்த திருப்பூரை சேர்ந்த நந்தகுமார், ராஜேஷ், முத்துரத்தினம் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநர் தலைமறைவாகியதால் உயிரிழந்தவரின் விபரம் தெரியவில்லை. விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.