நடிகர் ரஜினிகாந்திற்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரம்: ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பில் கோவை கமிஷனர் அலுவலகத்தில் மனு

கோவை: நடிகர் ரஜினிகாந்திற்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் திராவிட கழகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பில் கோவை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: நடிகர் ரஜினிகாந்திற்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் திராவிட கழகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பில் கோவை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பத்திரிகையின் ஐம்பதாம் ஆண்டு விழாவில் ராமன் சீதை குறித்து பேசுகையில், பெரியார் குறித்தும் அவர் நடத்திய ஊர்வலம் குறித்தும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார், இந்நிலையில் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திராவிடர் கழகம் மற்றும் திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகள் ரஜினிகாந்தின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது தொடர்பாக கோவை கமிஷனர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்க வந்த ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தினர், பெரியார் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் உயிரோடு இருக்க மாட்டார் என்று மிரட்டும் தொனியில் பேசியதாக புகார் தெரிவித்துள்ளனர். 

மேலும், அவரது படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் தடுத்து நிறுத்துவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் திராவிட கழகத்தினர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதே போல் ரஜினிகாந்த் அவர்களை பற்றி அவதூறு பரப்பி வரும் ரெட்பிக்ஸ் இணைய தளத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...