குடியரசு தினவிழாவையொட்டி குன்னூரில் மினி மாரத்தான் போட்டி; 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியரசு தினவிழாவையொட்டி ராணுவ வீரர்கள் மற்றும் சிறுவர் சிறுமியருக்கான மினி மாரத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியரசு தினவிழாவையொட்டி ராணுவ வீரர்கள் மற்றும் சிறுவர் சிறுமியருக்கான மினி மாரத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் 71வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு 3 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கான மினி மாரத்தான் போட்டி நடந்தது. இளைஞர்கள் ராணுவத்தில் சேருவதற்கு ஊக்குவிக்கும் வகையிலும், உடல் ஆரோக்கிய பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ராணுவ வீரர்கள் அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் உட்பட மாணவ மாணவியரும் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கொட்டும் பனியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியை வெலிங்டன் ராணுவ மைய கமாண்டர் பிரிகேடியர் எஸ்.கே.குரையா துவக்கி வைத்தார். தொடர்ந்து நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 



முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு, ராணுவ மைய கமாண்டரின் மனைவி ஹர்தீப் கோர் குரையா சிறப்பு விருந்தினராக பங்கேற்று 17 பேருக்கு பதக்கங்கள் வழங்கினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...