அதிமுக பெயரில் போலி ஆவணம் மற்றும் இணையதளம் தயாரித்ததாக எழுந்த புகார்; முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமிக்கு பிப்., 7ம் தேதி வரை நீதிமன்ற காவல்

கோவை: அதிமுக பெயரில் போலி இணையதளம் தயாரித்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி பழனிச்சாமியை பிப்ரவரி 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


கோவை: அதிமுக பெயரில் போலி இணையதளம் தயாரித்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி பழனிச்சாமியை பிப்ரவரி 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 1989-ல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் கே.சி.பழனிச்சாமி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார். இதைதொடர்ந்து காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் இவர் கட்சி விரோத நடவடிக்கைக்காக அதிமுகவில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று காலை திடீரென கோவை லாலிரோட்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். முத்து கவுண்டன் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேல் கொடுத்த புகாரின் பேரில் கே.சி பழனிச்சாமி போலீசார் கைது செய்தனர்.

மேலும், கைதுசெய்யப்பட்ட அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 417 - ஏமாற்றுதல், 418 - நம்பியவர்களை ஏமாற்றுதல், 419 - ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், 464 - தவறான ஆவணத்தை உருவாக்குதல், 465 - பொய் ஆவணம் உருவாக்கி ஏமாற்றுதல், 468 - ஏமாற்ற திட்டமிட்டு ஆவணம் உருவாக்குதல், 479 - சொத்து குறியீட்டைத் தவறாக பயன்படுத்துதல், 481 - தவறான சொத்து குறியீட்டை பயன்படுத்துதல், 482 - சொத்து குறியீட்டை தவறாக பயன்படுத்தியதற்கான தண்டனை, 485 - சொத்து அடையாளத்தை உருவாக்கும் கருவியை வைத்திருத்தல் மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



இதையடுத்து, சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக டிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் கே.சி.பழனிச்சாமியிடம் சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனால் சூலூர் காவல் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், பத்திரிகையாளர்களை காவல் நிலைய வளாகத்திற்குள் வர மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இவர் அதிமுகவில் பொறுப்பு வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதையடுத்து மேலும் வழக்குகள் பதிவு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.



இந்நிலையில், விசாரணையின் முடிவில் அவர், சூலூர் நீதிபதி வேடியப்பன் முன் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, அவரை பிப்ரவரி மாதம் 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஜாமின் மனு மீதான விசாரணை வரும் செவ்வாய் அல்லது புதன்கிழமை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவிற்கு பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும் என கே.சி,.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு பிப்ரவரி 6ம் தேதி விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...