மேட்டுப்பாளையம் யானைகள் நலவாழ்வு முகாம்: காயமடைந்துள்ள குருங்குடி வள்ளி யானைக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை!

கோவை: மேட்டுப்பாளையம் யானைகள் நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள திருநெல்வேலி நம்பிராயர் கோவில் யானை குருங்குடி வள்ளிக்கு வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

கோவை: மேட்டுப்பாளையம் யானைகள் நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள திருநெல்வேலி நம்பிராயர் கோவில் யானை குருங்குடி வள்ளிக்கு வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து 28 கோவில் யானைகள் இந்த முகாமில் பங்குபெற்றுள்ள நிலையில் முகாமில் யானைகளின் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

யானைகள் உடல் எடைக்கு ஏற்றவாறு தீவன கட்டுப்பாடுகள், நடைபயிற்சி போன்றவை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கோவில்களில் சிமெண்ட் தரைகளிலும், கல் தளங்களில் கட்டி வைக்கப்படும் யானைகளுக்கு சிறு சிறு புண்கள் உள்ளன. 



எனவே, அதனை கண்டறிந்து காயமடைந்த யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஏழு பேர் கொண்ட மருத்துவக்குழு நியமிக்கப்பட்டு யானைகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இம்முகாமில் பங்கேற்றுள்ள திருநெல்வேலி மாவட்டம் அழகிய நம்பிராயர் கோவில் யானை குறுங்குடி வள்ளி யானைக்கு வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில் அந்த யானைக்கு மருத்துவக்குழுவினர் இன்று சிகிச்சை அளித்தனர். யானையை படுக்க வைத்து பாகன் உதவியுடன் காயமடைந்த பகுதியில் ஆன்டிபயாடிக் போன்ற மருந்துகள் கொண்டு சுத்தம் செய்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டன.

பொதுவாக யானைகள் தரையில் படுத்து உறங்கும் போது அதன் வயிற்று பகுதிகளில் இதுமாதிரியான புண்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் யானையின் காயத்திற்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் அதனை தொடர்ந்து கண்காணித்து தேவையான மருந்துகளை அளிக்க மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...