திருப்பூர்: திருப்பூரில் பிப்ரவரி 2ம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் அனைத்து காளைகளும் பங்கேற்க விழாக்குழுவினர் உடன் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சாலை பாதுகாப்பு வார விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூரில் 31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறந்த விளங்கிய ஓட்டுநர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நற்சான்றிதழ் வழங்கிய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவிகிதம் விபத்துக்கள் குறைந்துள்ளதாக கூறினார்.

தமிழகத்தை பொருத்தவரை திருப்பூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் விபத்துக்களை குறைக்க இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்றார்.
திருப்பூரில் பிப்ரவரி 2ம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் காளைகள் பதிவு செய்வதில் குளறுபடிகள் இருப்பதை களைய ஜல்லிக்கட்டு குழுவினரை அழைத்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து காளைகளும் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றவர், ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு இணை இயக்குநர் தலைமையில் சிறப்பு மருத்துவ குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அம்மா ஆம்புலன்ஸ் தயார் நிலையில் அப்பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்படுவதாகவும், காளைகளுக்கு காயம் ஏற்பட்டால் உடனுக்குடன் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.