கோவை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம்; தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த பயனாளி..!

கோவை: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின்‌ மூலம்‌ நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில்‌ பயன்பெற்ற பயனாளி தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்‌.

கோவை: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின்‌ மூலம்‌ நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில்‌ பயன்பெற்ற பயனாளி தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்‌.

கோவை மாவட்டத்தில்‌ படித்த மற்றும்‌ வேலை வாய்ப்பற்றவாக்களின்‌ வாழ்வாதாரத்தை உயர்த்த இளைஞர்களுக்கான தனியார்‌ துறை வேலைவாய்ப்பு வழங்கும்‌ திட்டம்‌ வேலைவாய்ப்பு அலுவலகத்தால்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தனியார்‌ துறையில்‌ வேலை வாய்ப்புக்கு வேலை அளிப்போர்‌, வேலை தேடுவோர்‌ சந்திப்பு நிகழ்ச்சிகள்‌ ஒவ்வொரு வாரமும்‌ வெள்ளிக்கிழமை கோயம்புத்தூர்‌ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில்‌ நடைபெறுகிறது. இந்த தனியார்‌ துறை வேலைவாய்ப்பு நேர்காணல்‌ நிகழ்ச்சியில்‌ படிக்காதவர்கள்‌ முதல்‌ 10-ம்‌ வகுப்பு, 12ம்‌ வகுப்பு, அனைத்து பட்டதாரிகள்‌, முதுநிலை பட்டதாரிகள்‌, ஐடிஐ படிப்பு பயின்று சான்றிதழ்‌ பெற்றவர்கள்‌ மற்றும்‌ டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்கள்‌, அனைத்து கல்வித் தகுதி உடையவர்களுக்கு நேர்காணல்‌ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

டிரைவர்‌, பிட்டர்‌, டர்னர்‌, கம்யூட்டர்‌ ஆப்ரேட்டர்‌ போன்ற தொழிற்கல்வி பயின்றவர்‌ வரை அனைத்து கல்வித் தகுதி உடையவர்கள்‌ கலந்து கொண்டு பயன்பெற்று வருகிறார்கள்‌. இத்தனியார்‌ வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில்‌ கலந்து கொள்ளும்‌ மனுதாரர்கள்‌ வேலையளிப்பவருக்கு எந்தவித கட்டணமும்‌ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சி முற்றிலும்‌ இலவசமாக நடத்தப்படுகிறது.

2018-19ஆண்டில்‌ நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்கள்‌ மூலம்‌ 3232 வேலைநாடுநர்கள்‌ பணி வாய்ப்பு பெற்று தனியார்‌ துறைகளில்‌ பணியமர்த்தப்பட்டுள்ளனர்‌. 2019-20 ஆண்டில்‌ நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்களில்‌ 6535 வேலைநாடுநர்களும்‌ 578 வேலையளிப்போரும்‌ கலந்து கொண்டுள்ளனர்‌. 2019-20 ஆண்டில்‌ நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில்‌ 3048 வேலைநாடுநர்கள்‌ பனி வாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளனர்‌. கடந்த இரண்டு ஆண்டுகளில்‌ நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்களில்‌ 6280 வேலைநாடுநர்கள்‌ பணிவாய்ப்பு பெற்றுள்ளனர்‌.

இந்நிலையில், உப்பிலிப்பாளையம்‌ பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்பவர் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின்‌ மூலம்‌ நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம்‌ தனியார்‌ நிறுவனத்தில்‌ மாதம்‌ ரூ.10,000/- ஊதியத்தில்‌ வேலை கிடைத்ததுள்ளதாகவும் இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு தனது நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...