கோவையில் அரசுப் போக்குவரத்து பணிமனையில் பேருந்தில் திடீர் தீ விபத்து; தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்

கோவை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து இன்று கோவை கவுண்டம்பாளையம் பணிமனையில் திடீரென தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து இன்று கோவை கவுண்டம்பாளையம் பணிமனையில் திடீரென தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் பணிமனை இயங்கி வருகிறது. இந்த பணிமனைக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன.



இந்நிலையில், இன்று TN-01 AN 2371 என்ற எண் கொண்ட எஸ்.இ.டி.சி., பேருந்தானது திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து சம்பவத்தை நேரில் பார்த்த பார்த்தசாரதி என்பவர் நேரடியாக அருகே உள்ள வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு சென்று தகவல் கொடுத்தார்.



பின்னர் பணிமனைக்கு விரைவாக வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் அரை மணி நேரமாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் தீ அணைக்கப்பட்டது. மேலும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்ததால் தீயானது அருகே உள்ள பேருந்துகளில் பரவாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...