கோவை: தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று(25.01.2020) வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தொடங்கி வைத்தார். இப்பேரணியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்களை முழங்கியும் பேரணியாக சென்றனர்.

இந்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி பந்தய சாலை வரை சென்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பொன்.முத்துராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியர்கள் தனலிங்கம், சுரேஷ், மாநகராட்சி உதவி ஆணையர் மகேஷ், வட்டாட்சியர் (தேர்தல்) சுந்தரராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அவர்கள் தெரிவிக்கையில் ;-
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி “தேசிய வாக்காளர் நாள்” அனுசரிக்கப்படுகிறது. இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதும், வாக்களிப்பதை தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும். இந்திய நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடாகும். மேலும், மக்களாட்சி தத்துவத்தை கொண்டுள்ளது. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய மக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள்.
ஒவ்வொரு தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க ஏதுவாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டும் வருகிறது. இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள இப்பேரணியினை போன்று கோவை மாவட்டத்தில் உள்ள வருவாய் வட்டம், கிராமங்கள் வாரியாக அனைத்து பகுதிகளிலும் வாக்காளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் நோக்கம் வலுவான ஜனநாயகத்தை உருவாக்கும் வகையில் அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றவேண்டும் என்பதே ஆகும், என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் தினத்தினையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ மாணவர்களிடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும், மேலும் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
முன்னதாக, தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் புதிய வாக்காளர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள், அனைவரும் வாக்காளர் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.