கோவை: கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் தாக்குதல் இதுவரை இல்லை என்றும் இருப்பினும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் அனைத்து பொது இடங்களிலும் பாதுகாப்புப் பணியில் மருத்துவர்கள் சோதனையில் உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்தார்.
கோவை: கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் தாக்குதல் இதுவரை இல்லை என்றும் இருப்பினும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் அனைத்து பொது இடங்களிலும் பாதுகாப்புப் பணியில் மருத்துவர்கள் சோதனையில் உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட துறை மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பேரணியில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி ரேஸ்கோர்ஸ் வரை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, தேர்தல் மற்றும் வாக்காளர்களை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்துகின்ற வகையில் இந்த பேரணி நடைபெற்றது என்றார். மேலும் தற்போது பரவிவரும் கோரோனா வைரஸ் பற்றி கேட்கையில், கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இந்த வைரஸ் தாக்குதல் இதுவரை இல்லை என்றும் இருப்பினும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் அனைத்து பொது இடங்களிலும் பாதுகாப்புப் பணியில் மருத்துவர்கள் சோதனையில் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசு கோவை ரேஸ் கோர்சில் உள்ள காவல் நிலையத்தை சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்ததற்கு காவலர்கள் தான் காரணம் என்றும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார். மேலும், கோவை மாவட்டமானது அமைதிக்கு பெயர் போன மாவட்டம் என்றும் கோவை மக்கள் அனைவரும் அமைதியை பறைசாற்றக் கூடிய மக்கள் என்றும் பெருமிதம் தெரிவித்த அவர், கோவை மக்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் குடியரசு தின வாழ்த்து தெரிவித்தார்.