கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியின் முன் புறப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் முனைவர் முரளீதரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக கல்லூரி வாசல் முன் வால்பாறை வட்டாட்சியர் வெங்கடாசலம் உறுதிமொழியை வாசிக்க மாணவ, மாணவிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
கல்லூரி முன் துவங்கிய பேரணி காந்தி சிலை வளாகம், பழைய பேருந்து நிலையம், தபால் நிலையம், மார்க்கெட் வழியாக வந்து மீண்டும் கல்லூரியில் முடிவுற்றது. இந்த ஊர்வலத்தில் வந்த மாணவர்கள் வாக்களிப்பது நமது கடமை,18 வயது பூர்த்தியானவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர். மேலும், வாக்களிப்பதின் அவசியத்தை எடுத்துக்கூறும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கு வழங்கினர்.
இந்த பேரணியில் கல்லூரி முதல்வர் முனைவர் முரளீதரன், வட்டாட்சியர் வெங்கடாசலம், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் மூர்த்தி வருவாய்த்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.