கோவை: கோவை குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடாமி உடன் இணைந்து மாணவர்களுக்கான குடிமையியல் பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று கையொப்பம் இட்டது.

குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தாளாளர் சங்கர் வானவராயர் அவர்களும் சென்னை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடாமியின் தாளாளர் டாக்டர்.வைஷ்ணவி சங்கர் அவர்களும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
இந்நிகழ்விற்கு குமரகுரு கல்வி நிறுவனங்களின் தாளாளர் சங்கர் வானவராயர் தலைமை ஏற்றார். மேனாள் இந்திய வெளியுறவுத்துறை தூதர் பார்த்தசாரதி நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிறுவனத்தின் இணை தாளாளர் சங்கர் வானவராயர் பேசுகையில், குடிமையியல் சார்ந்த பணிகள் பெரும் அங்கீகாரத்தையும் மதிப்பையும் பாதுகாப்பையும் தருவதைக் காட்டிலும் அது நம் நாட்டிற்காக உழைப்பது என்னும் நிலையில் மிகுந்த தன்னிறைவு அளிப்பதாகும். இந்த பயிற்சி மையம் இளைய தலைமுறையினரை நாட்டிற்குச் சீரிய, ஆக்கப்பூர்வமாக பங்காற்றுகின்ற ஊக்கத்தையும் தொடர் பயிற்சியையும் வழங்கும் என்றார்.
தொடர்ந்து சிறப்புரையாற்றிய மேனாள் இந்திய வெளியுறவு தூதர் பார்த்தசாரதி, இந்தியாவினுடைய மிகப்பெரும் பலம் இந்தியாவின் மக்கள் தொகையில் விளங்கும் 30 கோடி பள்ளி மாணவர்கள். இந்த இளைஞர்கள் வருங்காலத்தில் வலுவான பொருளாதார தன்நிறைவு கொண்ட இந்தியாவிற்கு துணை நிற்பார்கள். அத்தகு எதிர்கால இந்தியாவிற்கு குடிமையியல் பணியாளர்கள் பெரும் வழிகாட்டுதலையும் நெறிப்படுத்துதலையும் அளிப்பார்கள். தன்னை நம்புவதே குடிமையியல் பயிற்சியின் அடிப்படையாகும். எனவே முழு நம்பிக்கையுடன் இந்த அரிய வாய்ப்பை இங்குள்ள மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சிறப்புரை நல்கினார்.
இந்த நிகழ்வில் சென்னை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாதெமியின் தாளாளர் டாக்டர். வைஷ்ணவி சங்கர் வாழ்த்துரை நல்கினார். குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர். விஜிலா கென்னடி வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக கோவை சங்கர் அகாடாமியின் ஒருங்கிணைப்பாளர் அருண் அனைவருக்கும் நன்றி கூறினார். இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.