கோவையில் மனிதநேய வார விழாவை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி; மாவட்ட ஆட்சியர்‌ தொடங்கி வைத்தார்

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ இன்று (24.01.2020) மாவட்ட ஆதிதிராவிடர்‌ நலத்துறை சார்பில்‌ அமைக்கப்பட்ட மனிதநேய வாரவிழா புகைப்பட கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள்‌ தொடங்கி வைத்து பார்வையிட்டார்‌.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ இன்று (24.01.2020) மாவட்ட ஆதிதிராவிடர்‌ நலத்துறை சார்பில்‌ அமைக்கப்பட்ட மனிதநேய வாரவிழா புகைப்பட கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள்‌ தொடங்கி வைத்து பார்வையிட்டார்‌.

இந்நிகழ்ச்சியில்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராமதுரைமுருகன்‌, மாவட்ட ஆதிதிராவிடர்‌ நல அலுவலர்‌ பிரபாகரன்‌, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ நல அலுவலர்‌ மணிமொழி, மாவட்ட திட்ட அலுவலர்‌ (ஒருங்கிணைந்த குழந்தைகள்‌ வளர்ச்சி திட்டம்‌) மீனாட்சி, அரசு அலுவலர்கள்‌, மற்றும்‌ பழங்குடியினர்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

பின்னர்‌ மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள்‌ தெரிவிக்கையில்‌;-

ஒவ்வொரு ஆண்டும்‌ ஜனவரி மாதம்‌, 24ம்‌ தேதி முதல்‌ 30ம் தேதி வரை மனிதநேய வார விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழாவில்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறையின்‌ சார்பில்‌ செயல்படுத்தப்படும்‌ திட்டங்கள்‌, திட்டங்களை பெறும்‌ வழிமுறைகள்‌ குறித்து பொதுமக்கள்‌, ஆதிதிராவிடர்கள்‌, பழங்குடியின மக்கள்‌ அனைவரும்‌ தெரிந்து கொள்ளும்‌ வகையிலான விழிப்புணர்வு, புகைப்படங்களுடன்‌ திட்ட விளக்கங்களும்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில்‌ மனிதநேய வார விழாவின்‌ முதல்‌ நாள்‌ விழாவாக ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ செய்தி மக்கள்‌ தொடர்பு துறையும்‌ இணைந்து நடத்தும்‌ நலத்திட்டங்கள்‌ குறித்த கண்காட்சி இன்று(24.01.2020) துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும்‌, இரண்டாம்‌ நாள்‌ விழாவாக நாளை (25.01.2020) ஆதிதிராவிடர்‌ நலத்துறை விடுதிகளில்‌ தங்கி பயிலும்‌ மாணவ மாணவியர்களுக்கான கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, நாட்டியம்‌, நாடகம்‌ உள்ளிட்டவை நடத்தப்படுகின்றது. மூன்றாம்‌ நாளான 26.01.2020 அன்று நாட்டு நலப்‌ பணித்‌ திட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்களின்‌ வீடுகளுக்குச்‌ சென்று தேநீர்‌ அருந்தி மகிழும்‌ நிகழ்ச்சியும்‌, நான்காம்‌ நாளான 27.01.2020 அனைத்து மத தலைவர்களையும்‌, ஆதிதிராவிடர் இன சான்றோர்களையும்‌ ஒன்று கூட்டி நல்லிணக்க கூட்டங்கள்‌ நடத்தப்படும்‌.

ஐந்தாம்‌ நாளான 28.01.2020 அன்று பொள்ளாச்சி கல்வி வட்டத்தில்‌ ஆதிதிராவிடர்‌ நலத்துறை விடுதிகளில்‌ தங்கி பயிலும்‌ மாணவ மாணவியர்களுக்கான கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, நாட்டியம்‌, நாடகம்‌ உள்ளிட்டவை நடத்தப்படுகின்றது. ஆறாம்‌ நாள்‌ நிகழ்ச்சியாக 29.01.2020 அன்று அனைத்து சமுதாயத்தில்‌ முன்னேற்ற நிலையிலுள்ள ஆதிதிராவிடர்‌ அலுவலர்கள்‌ மருத்துவர்கள்‌, பொறியாளர்கள்‌, வழக்கறிஞர்கள்‌, தொழில்முனைவோர்‌ ஆகியோரை சமுதாய பொருளாதார முன்னேற்ற சிந்தனைக்‌ கூட்டங்கள்‌ நடத்தப்படும்‌. வார விழாவின்‌ இறுதி நாள்‌ (30.01.2020) நிகழ்ச்சியாக நிர்மலா மகளிர்‌ கல்லூரியில்‌ பள்ளி, கல்லூரிகளில்‌ சிறப்பு தகுதி பெற்றோருக்கான பரிசுகள்‌, ஊக்கத்தொகைகள்‌ வழங்குதல்‌, தொழில்‌ முனைவோருக்கான நிதி உதவி வழங்குதல்‌ நிகழ்ச்சிகள்‌ நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்தார்‌.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...