கோவை: 31வது சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் கண் பரிசோதனைகளை போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் துவக்கி வைத்தார்.

31வது சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த முகாமின் மூலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக பணியாளர்களின் உடல் நலம், கண்பார்வை குறைபாடுகளை நீக்கி உடல் நோய் குறைபாடுகளின்றி பேருந்துகளை இயக்கும் போதும், மற்ற போக்குவரத்து பணிகளில் முழு ஈடுபாட்டுடன் பணிபுரியும் போது விபத்துகள் பெருமளவில் குறையும்.

இந்த நிலையில், இன்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் போக்குவரத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான மருத்துவ முகாமினை அன்பு ஆபிரகாம் துவக்கி வைத்தார். ராயல் கேர் மருத்துவமனை இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தது.

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மூலம் கண் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் பொது மேலாளர்கள் மகேந்திரகுமார், குமார், துணை மேலாளர்கள், உதவி மேலாளர் ராமநாதன் மற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.