கோவை: கோவை சிறுமுகை அருகே செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் தொழிலாளிகளின் வைப்பு நிதியை ஏமாற்றி தனது கணக்குக்கு மாற்றிய மனிதவள மேம்பாட்டு அதிகாரியை கோவை பந்தய சாலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை அடுத்த சிறுமுகை பகுதியில் எஸ்பி அஃப்பியரன்ஸ் என்ற தனியார் பனியன் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் மனித வள மேம்பாட்டுப் பிரிவு அலுவலராக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், பிரகாஷ் கடந்த சில மாதங்களாகவே தொழிலாளர்களின் வைப்பு நிதியை தன் கணக்குக்கு மாற்றி மோசடி செய்து வருவதாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட வருங்கால வைப்பு நிதி அலுவலர் வேல்ராஜ் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்ட பிரகாஷை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ரூபாய்களை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.