உள்ளாட்சி துறை அமைச்சர் முன்னிலையில் கோவை மாவட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர் பொறுப்பேற்பு..!

கோவை: கோவை மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்ட சாந்திமதி மற்றும் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமுல் கந்தசாமி ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

கோவை: கோவை மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்ட சாந்திமதி மற்றும் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமுல் கந்தசாமி ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

சூலூர் 7வது வார்டு மாவட்ட கவுன்சிலராக போட்டியிட்டு மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் தோப்பு அசோகன் மனைவி சாந்திமதி(55) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அதேபோல, அன்னூர் 3வது வார்டு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் போட்டியில் அதிமுகவை சேர்ந்த டி.கே அமுல் கந்தசாமி 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில், கோவை மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்ட சாந்திமதி மற்றும் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமுல் கந்தசாமி ஆகியோர் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு மாவட்ட தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அணிவித்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தலைவருக்கான அறையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, எம்.எல்.ஏ.க்கள் ஆறுகுட்டி, கந்தசாமி, எட்டிமடை சண்முகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...