சென்னை: பெரியார் குறித்து அவதூறாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு அவகாசம் வழங்க கோரி நீதிபதிகள் மனுதாரரிடம் பரிந்துரை செய்ததையடுத்து வழக்கு திரும்ப பெறப்பட்டது.

கடந்த ஜனவரி 14ம் தேதி சென்னையில் துக்ளக் இதழின் ஐம்பதாம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் 1971ஆம் ஆண்டில் சேலத்தில் பெரியார், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் கொண்டு போனார்கள் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். இது திராவிட சிந்தனையாளர்கள் மத்தியில் ரஜினி மீது எதிர்ப்பாக கிளப்பியது.
அதேபோல சமூக வலைதளங்களில் ரஜினியின் பேச்சு விஷமம் உள்ளது எனவும் பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளது எனவும் கண்டனங்கள் கிளம்பியது. இந்த நிலையில் கடந்த 17ம் தேதி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து புகார் மனு தொடர்பாக காட்டூர் போலீசார், புகார்தாரர் நேரு தாஸிடம் சி.எஸ்.ஆர் அளித்தனர். ஆனால், முதல் தகவல் அறிக்கை பதியப்படாததால் புகார்தாரர் நேரு தாஸ் உயர்நீதிமன்றத்தில் ரஜினி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார்.
இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், தந்தை பெரியார் என்பவர் மிகப்பெரிய தலைவர் என்று கருத்து தெரிவித்தார். மேலும், புகார் கொடுத்த 15 நாட்கள் முடிவதற்குள் முன்னதாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்..? புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கால அவகாசம் வழங்கிய பின் நீதிமன்றத்தை மனுதாரர்கள் அணுகியிருக்க வேண்டும் என்றார். இதை தொடர்ந்து மனுதாரர் வழக்கை நீதிபதியின் கருத்துக்கிணங்க திரும்ப பெற்றுக்கொண்டார்.