நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஜனவரி 24 முதல் 30ம் தேதி வரை நடைபெறவுள்ள மனித நேய வாரவிழாவை இன்று உதகையிலுள்ள பிரிக்ஸ் பள்ளி கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

பின்னர் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் கூறும்போது;-
பழங்குடியினருக்கான பல்வேறு திட்டங்கள் அரசு மூலம் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக இதில் சுயதொழில் புரியும் பழங்குடியினருக்கு வங்கிக்கடன் ஏற்படுத்தி கொடுக்கப்படும் எனவும் இந்த வாரவிழா இறுதி நாளில் அதற்கான ஏற்பாடுகளை இங்குள்ள அலுவலர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், பழங்குடியினரின் வாழ்வியல் முறைகளையும் கலாச்சாரங்களையும் காணும் வகையில் இந்த வார விழா இடம் பெற்றிருப்பதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசுத் துறைகளைச் சார்ந்த 20க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன்படுத்தும் பொருட்களை காட்சிப்படுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.