திருப்பூர்: திருப்பூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் முன்னதாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கல்லூரி மாணவிகள் கலந்துகொண்ட இந்த பேரணியை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியின் போது, பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் பதாகைகள் ஏந்தியவாறு மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.

இதேபோல, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை சார்பில் நடைபெற்ற மனிதநேய வாரவிழாவை விழாவினை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தொடங்கிவைத்தார்.

இந்த விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த புகைப்படக் கண்காட்சியும், படுகர் இன பாரம்பரிய நடனமும் நடைபெற்றது.