கோவையில் ஒரு கோயம்பேடு..! வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா

கோவை: கோவை அடுத்த வெள்ளலூரில் ரூ.168 கோடி மதிப்பீட்டில் 61.62 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் இன்று பூமி பூஜை போடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.


கோவை: கோவை அடுத்த வெள்ளலூரில் ரூ.168 கோடி மதிப்பீட்டில் 61.62 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் இன்று பூமி பூஜை போடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

கோவை வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கு.இராசமணி, மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார் ஜடாவத் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை, தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் எனவும் 257.04 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கோவை மாநகராட்சியில் 2018ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை 18,50,000 ஆக இருப்பதாக தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் சுற்றியுள்ள பகுதிகளில் தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் அதிகமாக இருப்பதால் அன்றாடம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகமான மக்கள் கோவை நகருக்குள் வந்து செல்கின்றனர் எனவும் தற்போது காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் சாலை ஆகிய இடங்களில் பேருந்து நிலையங்கள் பயன்பாட்டில் இருந்தாலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வெள்ளலூர் பகுதியில் 61.62 ஏக்கர் பரப்பளவில் 168 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த பேருந்து கட்டுமான பணி அரசு மானியம் மற்றும் மாநகராட்சி பொதுநிதி மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது எனவும், பொதுமக்களின் வசதிக்கேற்ப அடிப்படை வசதிகளான தங்குமிடம், உணவகம், வணிக வளாகங்கள் மற்றும் கழிப்பிட வசதிகளுடன் அமைய உள்ளது எனவும் கோவை மாநகரில் உள்ள பொள்ளாச்சி சாலை, பல்லடம் சாலை, அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய உள்ளதாக தெரிவித்தார்.



இந்த பேருந்து நிலையத்தில் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தங்கள் தனி தனியாக இடவசதியுடன் அமைக்கப்பட உள்ளது எனவும் பேருந்து நிலையம் இங்கு அமைக்கப்படுவதன் மூலம் வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் வேலுமணி, கடந்த 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகால வளர்ச்சியை கோவை அடைந்திருக்கின்றது என்று கூறினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...