நகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள் திருத்தியமைக்கப்பட்டு புதிய திடக்கழிவு கொள்கை உருவாக்கப்படவுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: நகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள் திருத்தியமைக்கப்பட்டு மத்திய அரசின் அறிவுரைப்படி, புதிய திடக்கழிவு மேலாண்மை கொள்கை உருவாக்கப்படவுள்ளதாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை: நகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள் திருத்தியமைக்கப்பட்டு மத்திய அரசின் அறிவுரைப்படி, புதிய திடக்கழிவு மேலாண்மை கொள்கை உருவாக்கப்படவுள்ளதாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை, ஹைதராபாத்தில் உள்ள மகாத்மா காந்தி கிராம கல்வி நிறுவனம் மற்றும் குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய கழிவு மேலாண்மை மற்றும் சமூக தொழில்முனைவு இரண்டாம் நாள் கண்காட்சியினை பார்வையிட்டு பின்னர் மாணவர்களிடையே அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரையாற்றினார்.



அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், தமிழக அரசு கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.88,925 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் விநியோகம், சாலை வசதி, மழைநீர் வடிகால்கள், தெரு விளக்குகள் பராமரிப்பு, பாதாள சாக்கடைத் திட்டம், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதி பணிகளைச் செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் மூலம் தினமும் சராசரியாக 19,000 மெட்ரிக் டன் குப்பைகள் கையாளப்படுகின்றன. ஊரகப்பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், வீடு வீடாக சென்று, குப்பைகளை சேகரிக்கவும், பிரிக்கவும், அவற்றை குப்பை கிடங்குகளுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளுக்காக அனைத்து 12,524 கிராம ஊராட்சிகளிலும், 66,025 தூய்மை காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு திடக்கழிவு மேலாண்மைக்காக பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும், அரசு முதற்கட்ட குப்பை சேகரிப்பு மற்றும் குப்பைகளை எடுத்துச் செல்லும் பணிகளுக்கு வாகனங்கள் மற்றும் கொள்கலன்கள் வாங்குதல் மற்றும் உரக்கிடங்குகள் அமைத்தல், உயிரி எரிவாயு கலன்கள், குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் போன்ற பணிகளுக்கு, ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டம் மற்றும் சிறப்புத் திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஆகியவற்றின் மூலம் மொத்தம் 1,515 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் ரூ.3853 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.2045 கோடியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள் திருத்தியமைக்கப்பட்டு மத்திய அரசின் அறிவுரைப்படி, புதிய திடக்கழிவு மேலாண்மை கொள்கை உருவாக்கப்படவுள்ளது. மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உற்பத்தியாகும் திடக்கழிவுகளில் மக்கும் தன்மையுள்ள மொத்த கழிவுகள் குறிப்பாக உணவகங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள்,காய்கறி அங்காடிகள்,இறைச்சிக் கூடங்கள் ஆகியன மூலம் பெறப்படும் கழிவுகள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 180 மெட்ரிக் டன் திறனுடன் ரூ.30.39 கோடி மதிப்பீட்டில் 33 உயிரி எரிவாயு கூடங்கள் அமைக்கப்பட்டு திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது. கழிவுகளை உருவாகும் இடத்திலேயே அதாவது வீடு தோறும் விற்பனை வளாகம் தோறும், தொழிற்சாலைகள் தோறும்,உணவகங்கள் தோறும், நேரடியாக சென்று சேகரித்து எடுத்து சென்று மறு சுழற்சிக்குரிய பொருட்களை தனியாகவும் மக்கும் கழிவுகளை தனியாகவும் கையாண்டு உருமாற்றி உரமாகவும், மீத்தேன் வாயுவாகவும், பிற மின்சக்தியாகவும் மாற்றும் வகையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.



வரும் 2023ம் ஆண்டு தூய்மையான தமிழகத்தை நோக்கி சென்றிட வேண்டி தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடி அளவிற்கு 2013-ம் ஆண்டு முதல் ஒதுக்கீடு செய்து வருகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை திறம்பட செயல்படுத்திட வேண்டி திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படி திட கழிவுகளை உருவாக்குபவர்களின் கடமைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெருமளவில் திடக்கழிவுகளை உருவாக்கும் நிறுவனத்தினர், உணவகத்தினர், அலுவலக வளாகத்தினர் தங்களது வளாகங்களிலேயே உரிய முறையில் திடக்கழிவுகளை பிரித்து சேகரித்து முறைப்படி உருமாற்றி பயன்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூய்மையான தமிழகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் முக்கியத்துவத்தையும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 2016ல் திருத்தியமைக்கப்பட்ட வரைவு நகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகளில் உணவகங்களில் தினசரி உருவாகும் இயற்கை முறையில் மக்கும் தன்மையுடைய கழிவுகளை இயன்ற அளவு உணவக வளாகத்திலேயே இயற்கை உரமாக அல்லது எரிவாயுவாகவோ மாற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது என்று கூறினார்.



இந்த நிகழ்ச்சியில் ஹைதராபாத்தில் உள்ள மகாத்மா காந்தி கிராம கல்வி நிறுவனத்தின் மூத்த பேராசிரியர் நவீன்குமார், இக்கல்வி குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் .கே.சுந்தரராமன், கல்லூரியின் முதல்வர் முனைவர்.பி.பேபி ஷகிலா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...