கோவை: கோவையில் கேபிஆர் நிறுவன உரிமையாளர்கள் போலி பத்திரம் தயாரித்து நில அபகரிப்பு செய்ய முயன்ற வழக்கில் நீதிமன்ற உத்தரவை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார்.

கோவை பிரஸ் கிளப்பில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பார்வேந்தன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் மற்றும் அவரது சகோதரர்கள் சொத்துக்களை கே.பி.ஆர் குழுமம் போலியாக ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாகவும் இது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தர்மலிங்கம் தந்தையின் சொத்தான 4.15 ஏக்கர் ஏற்கனவே விற்கப்பட்ட நிலையில், மீதம் உள்ள 1.60 சென்ட் நிலத்தை கே.பி.ஆர் குழுமம் 2007ம் ஆண்டு விலைக்கு கேட்டதாகவும் அதை விற்க மறுத்த நிலையில் தர்மலிங்கத்தின் தந்தை கடந்த 2007ல் மரணமடைந்து உள்ளார். 2009ம் ஆண்டு தர்மலிங்கம் மற்றும் அவரது சகோதரர்கள் மீது 438/2009 எண் கொண்ட வழக்கை கே.பி.ஆர் குழும தலைவர் ராமசாமியின் மைத்துனர் சுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தர்மலிங்கத்தின் தந்தை இந்த இடத்திற்கு ஏழு லட்ச ரூபாய் முன்பணமாக பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். தர்மலிங்கத்தின் தந்தை இறந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பு இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. இதன் பின்னர் இது போலியாக தயாரிக்கப்பட்ட பத்திரம் என்று தர்மலிங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் மூன்று முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றத்தில் தர்மலிங்கம் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் கேபிஆர் குழுமம் மீது புகார் அளித்த நிலையில், இதனை காவல்துறை விசாரிக்க மறுத்ததால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை என்று கூறிய உயர்நீதிமன்ற நீதிபதி, இன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். இதில் மூன்று பேர் மட்டுமே ஆஜராகி வந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்ட முக்கிய உறுப்பினர்கள் கோவையில் இருந்து கொண்டு ஆஜராக மறுப்பதாக கூறியவர், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார். மேலும், தர்மலிங்கத்தின் குடும்பத்திற்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் தர்மலிங்கத்தின் குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளித்திட வேண்டும் என அப்போது அவர் குறிப்பிட்டார்.