நீலகிரி: நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சியில் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட 30 வீடுகள் பணிகள் முடிந்தும் திறக்கப்படாத நிலையில், உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் நீலகிரியில் பெய்த பலத்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக நடுவட்டம் பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. மேலும், பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உயிர் இழப்புகளும் ஏற்பட்டன.
அப்போது, மழை சேதங்களை நேரில் பார்வையிட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வீடுகளை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அபாயகரமான இடங்களில் வசிக்கும் மக்களுக்கும் மாற்று இடம் வழங்கப்படும் என கூறினார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா உத்தரவின் படி, நடுவட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இப்ராகிம் மேற்பார்வையில் நடுவட்டம் அரசு மாணவர் விடுதி அருகே உள்ள காலி இடத்தில் குடிநீர், கழிப்பிடம், மின் இணைப்பு என அனைத்து வசதிகளுடன் 30 வீடுகள் கட்டப்பட்டன.

இந்த வீடுகள் அனைத்து பணிகளும் முடிவடைந்தும் திறக்கப்படாமல் உள்ள நிலையில், வீடுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள், இந்த வீடுகள் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.