கோவை: கோவை மாநகராட்சி பிராதான அலுவலக் கூட்டரங்கில் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார ஜடாவத், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடை.எ.சண்முகம், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாநகர பொறியாளர் ஆ.இலட்சுமணன், உதவி ஆணையர்கள், மாநகர பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது;-
கோவை மாநகராட்சி சென்னை மாநகராட்சிக்கு அடுத்தபடியாக பரப்பளவிலும், மக்கள்தொகைப் பெருக்கத்திலும் மிகப்பெரிய மாநகராட்சியாக விளங்கி வருகின்றது. அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோவை மாநகராட்சியினை குடிநீர் வசதி, சாலைவசதி, பாதாளச் சாக்கடைத் திட்டங்கள், மழைநீர் வடிகால்கள், பூங்காக்கள் என அனைத்து வசதிகளிலும் தன்னிறைவு பெற்று 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியினை பெற்ற மாநகராட்சியாக திகழ்ந்து வருகின்றது. கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்குத் தேவையான ஏராளமான திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தனி கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.
கோவை மாவட்ட மக்களின் நீண்ட கால கனவான மெட்ரோ ரயில் திட்டம். சென்னை மெட்ரோ இரயில் கார்ப்ரேசன் மூலம் கள ஆய்வு நடைபெற்று வருகிறது. ரூ.1500 கோடி மதிப்பில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் உள்ளிட்ட 8 குளங்களில் மேம்பாட்டு பணிகளையும், பூங்காக்கள், சாலைகள், போன்ற பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேம்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கோவை மாநகர பகுதிகளுக்கு தடையில்லா குடிநீர் வழங்குவதற்கான திட்டப்பணிகளையும், மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளையும், புதிய குடிநீர் இணைப்புகளையும் விரைந்து வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதுபோலவே, பாதாள சாக்கடை திட்டப்பணிகளையும், மழைநீர் வடிகால் பணிகளையும் மக்களுக்கு பயன்தரும் வகையில் விரைந்து முடித்திட வேண்டும்.
சாலை வசதிகளை பொருத்தமட்டில் கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி முதல் ஈச்சனாரி வரை ரூ.414.90 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி 90 சதவிகிதம் முடிவுற்றுள்ளது. ரூ.320 கோடியில் மேற்கு புறவழிச்சாலை, ரூ.215 கோடியில் ஆத்துப்பாலம் - உக்கடம் வரை மேம்பாலம், ரூ.194 கோடியில் காந்திபுரம் இரண்டாம் அடுக்கு மேம்பாலம், உப்பிலிப்பாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை சுமார் 9.கி.மீ நீளமுள்ள அவினாசி சாலையில் உயர்மட்ட பாலம் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணிக்கு மண்பரிசோதனை செய்யப்பட்டு பாலத்திற்கான வடிவமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இம்மேம்பாலப்பணிகள் விரைவில் துவக்கப்படும். கோவை திருச்சி பிரதான சாலையில் ஸ்டாக் எக்சேன்ஜ்-லிருந்து ரெயின்போ வரையில் 3.15 கி.மீ நீளத்திலான மேம்பாலம், கவுண்டம்பாளையம் பகுதியில் ரூ.66 கோடி மதிப்பீட்டில் ஹவுசிங் யூனிட் முதல், இராமசாமி கல்யாண மண்டபம் வரை 1 கி.மீ நீளத்திலான உயர்மட்ட மேம்பாலம் என சுமார் ரூ.2000 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுப் பணிகளும், உயர்மட்டப்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றது. இப்பணிகளை அலுவலர்கள் விரைந்து செயல்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இக்கூட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டிற்கு வரும் போது தமிழ்நாட்டிலேயே கோவை மாநகரானது, போக்குவரத்து நெரிசலற்ற பகுதியாக இனிவரும் 50 ஆண்டிற்கு விளங்கும். மேலும், ரூ.168 கோடியில் வெள்ளலூரில் 50 ஏக்கரில், தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய நிதியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.
கோவை மாநகர பகுதிகளில், தெருவிளக்கு வசதிகள், குடிநீர்த் தேவைகள், கழிவுநீர் வடிகால் வசதி, சாலை வசதி, கழிப்பறை வசதிகள் என அடிப்படை கட்டமைப்புகளில் பூர்த்தி செய்யப்பட்ட மாவட்டமாக திகழ்கின்ற போதிலும் இவைகளின் பழுது தொடர்பாக புகார்கள் ஏதேனும் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நிவர்த்தி செய்திட வேண்டும் என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.