பெரியார் பற்றி அவதூறாக பேசிய நடிகர் ரஜினியின் உருவப்படத்தை கிழித்து போராட்டம்; 60க்கும் மேற்பட்டோர் கைது

கோவை: பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ரஜினியின் உருவப்படத்தை கிழித்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை: பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ரஜினியின் உருவப்படத்தை கிழித்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் 1971ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டின் போது ராமர், சீதை உருவங்களை உடையின்றி எடுத்து வந்து செருப்பால் அடித்தாக நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இதில் தபெதிக, திவிக, விசிக, திராவிடர் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.



அப்போது, ரஜினியின் உருவப்படத்தை கிழித்து போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள், பெரியாரை இழிவுபடுத்தும் நோக்கில் நடிகர் ரஜினிகாந்த் ஆதாரமற்ற கருத்தினை கூறியிருப்பதாகவும் அவரது கருத்தினை திரும்பப் பெறும்வரை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். 



இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...