கோவை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாகவும், அந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் சகோதரர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அடிதடி வழக்கையும் விசாரித்து வந்த சிபிஐ, தற்போது அடிதடி வழக்கின் மேல் நடவடிக்கையை கைவிடுவதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக முதலில் கோவை மாவட்ட காவலர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து அரசியல் தலையீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருப்பதால் சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த சிபிஐ, பல்வேறு ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். இதில் ஒன்றாக பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக புகார் அளித்த பெண்ணின் சகோதரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த அடிதடி வழக்கையும் சிபிஐ விசாரித்து வந்தது.
இந்த நிலையில், அடிதடி வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் மேல் நடவடிக்கையை கைவிடுவதாக சிபிஐ கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி 6ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இறுதி வாதம் நடைபெற்று தீர்ப்பு தேதி அறிவிக்க வாய்ப்புள்ளது.