திருப்பூர்: திருப்பூரில் பெற்றோர்களின் அஜாக்கிரதையால் வாளி தண்ணீரில் மூழ்கி ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த அவினாசிகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பனியன் தொழிலாளி கண்ணன். இவருடைய மனைவி பாண்டியம்மாள். இவர்களுக்கு கனிஷ்கா என்ற ஒரு வயது குழந்தை இருந்த நிலையில், பாண்டியம்மாள் வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, குழந்தை கனிஷ்கா வீட்டின் வெளியே வளாகத்தில் விளையாடி கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து பாண்டியம்மாள் வெளியே வந்து பார்த்தபோது குழந்தையை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.

பதற்றத்துடன் அக்கம்பக்கத்தில் குழந்தையை தேடிய போது வீட்டு வளாகத்தில் தண்ணீர் பிடித்து வைத்திருந்த வாளியில் குழந்தை கனிஷ்கா மூச்சு திணறியபடி கிடந்தாள்.

உடனடியாக குழந்தையை தூக்கி கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்.

குழந்தையின் உடலை பார்த்து தாய் பாண்டியம்மாள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது. இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.