கோவை: குடியரசு தினமான 26.01.2020 தேதியன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-
கிராமசபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், முதலமைச்சர் அவர்கள் 110 விதியின் கீழ் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம்(People's Plan Campaign) பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், குடியிருப்பு திட்டம்(ஊரகம்), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் சக்தி அபியான், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
எனவே, கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.