கேரளாவில் போலீசாரின் சோதனைச் சாவடி மீது வெடிகுண்டு வீசிய சம்பவம்: கோவையில் ஆர்எஸ்எஸ் கிளை அமைப்பின் உறுப்பினர் கைது

கோவை: கேரள மாநிலம் கண்ணூர் அருகேயுள்ள கதிரூரில் ஆர் எஸ் எஸ்ஸின் கிளை அமைப்பைச் சேர்ந்தவர்காவல்துறையின் சோதனைச்சாவடி மீது வெடி குண்டு வீசிய சம்பவத்தையடுத்து தலைமறைவாக இருந்தநிலையில் கேரள தனிப்படை போலீசார் இன்று கோவையில் அவரை கைது செய்தனர்.

கோவை: கேரள மாநிலம் கண்ணூர் அருகேயுள்ள கதிரூரில் ஆர் எஸ் எஸ்ஸின் கிளை அமைப்பைச் சேர்ந்தவர்காவல்துறையின் சோதனைச்சாவடி மீது வெடி குண்டு வீசிய சம்பவத்தையடுத்து தலைமறைவாக இருந்தநிலையில் கேரள தனிப்படை போலீசார் இன்று கோவையில் அவரை கைது செய்தனர்.

கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் பகுதி பெரும்பாலும் பதட்டமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் கம்யூனிஸ்டுகளுக்கும் இந்து அமைப்புகளுக்கும் அடிக்கடி மோதல்கள்ஏற்படுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதியன்று அதே பகுதியில் உள்ள போலீசாரின் சோதனைச் சாவடி மீது மர்மநபர் ஒருவரால் குண்டு வீசப்பட்டது. 

இதில் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றாலும, அச்சம்பவம் தொடர்பாக போலீசார்வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

இதை தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் மூலம் அடையாளம் கண்டதில்தாக்குதல் நடத்தியவர் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பிரபேஷ் என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து கேரள தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டையில்ஈடுபட்டனர். மேலும் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கோவைக்கு விரைந்த போலீசார்இன்று பிரபேஷை அவர் உறவினர் வீட்டில் வைத்து சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர், போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குச் சொந்தமான மனோஜ்சேவா கேந்திரத்தின் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் அப்பகுதியில் மோதலை உருவாக்க முயற்சித்துவெடிகுண்டை வீசியதாகவும், அது எதிர்பாராத விதமாக போலிஸாரின் சோதனைச் சாவடி மீதுவிழுந்தததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையடுத்து தலச்சேரி நீதிமன்றத்தில் பிரபேஷை ஆஜர்படுத்திய போலீஸார் அவரை சிறையில்அடைத்தனர்.

இவர் மீது ஏற்கெனவே பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...