வால்பாறையில் புதிய ஏ.டி.எம் மையம் திறப்பு; மக்கள் மகிழ்ச்சி

கோவை: இந்தியன் வங்கி சாரிபில் வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் புதிய ஏ.டி.எம் மையம் இன்று துவக்கி வைக்கப்பட்டது.

கோவை: இந்தியன் வங்கி சாரிபில் வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் புதிய ஏ.டி.எம் மையம் இன்று துவக்கி வைக்கப்பட்டது. 

கோவை மாவட்டம் வால்பாறையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேயிலை தோட்டங்களில் பணியாற்றி வருகிறார்கள். கடந்த காலங்களில் இவர்களுக்கு மாத சம்பளம் தேயிலை தோட்ட அலுவலகங்களில் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இவர்கள் அனைவருக்கும் வங்கி மூலமே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. 

தேயிலை தோட்ட பணியாளர்கள் அரசு ஊழியர்கள் வியாபாரிகள் ஓய்வூதியதாரர்கள் உட்பட ஏராளமானவர்கள் வங்கி பண பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றனர். ஆனால், வால்பாறையில் இன்றுவரை மூன்று ஏ.டி.எம் மையங்கள் மட்டுமே உள்ள நிலையில் பணம் எடுப்பதற்காக பல மணி நேரம் வரிசையில் காத்து கிடக்க வேண்டிய அவல நிலை உள்ளது. 

இதனை தவிர்க்கும் பொருட்டு அதிகப்படியான ஏ.டி.எம் மையங்களை அமைக்க தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். 



இந்நிலையில் இன்று இந்தியன் வங்கி சாரிபில் வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் புதிய ஏ.டி.எம் மையம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த புதிய ஏ.டி.எம்மை வால்பாறை இந்தியன் வங்கி கிளை மேலாளர் யுவராஜ் துவக்கி வைத்தார். 



விழாவில் உதவி கிளை மேலாளர் காளியப்பன் அலுவலர்கள் மற்றும் வியாபார பெருமக்கள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதன் காரணமாக விரைவில் பணம் எடுக்க வசதி ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...