கோவை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பேரணியில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாப்ப நாயக்கன்பாளையம் அரசு மகளிர் பாலிடெக்னிக்கில் இருந்து துவங்கிய பேரணி சித்தாபுதூரில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் முகமது ரியாஸ், தமிழ் மாநில செயலாளர் பாலா ஆகியோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
பின்னர் இந்த பேரணி குறித்து பேசிய தமிழ் மாநில செயலாளர் பாலா, மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் அதுவரை போராட்டங்கள் தொடரும் எனவும் தெரிவித்தார். பேரணியின் போது மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறவும் வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பியபடி கையில் பதாகைகளை ஏந்தி சென்றனர்.